- முகப்பு
- புதுச்சேரி
- எடப்பாடி சொன்னால் கடலில் குதிப்போம் குளத்தில் நீச்சல் அடிப்போம், வாயை வாடகை விட்டு பிழைக்கும் திமுக அல்ல நாங்கள்.
எடப்பாடி சொன்னால் கடலில் குதிப்போம் குளத்தில் நீச்சல் அடிப்போம், வாயை வாடகை விட்டு பிழைக்கும் திமுக அல்ல நாங்கள்.
சக்திவேல்
UPDATED: Nov 16, 2024, 10:42:09 AM
புதுச்சேரி
ராஜ்பவன் சட்டமன்ற தொகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வாழைக்குளம் பகுதியில் சுமார் 370 சதுர அடி அளவில் 220 பயனாளிகளுக்கு 20 கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடி வீடுகள் கட்டப்படுகிறது.
அதே போன்று குமரகுரு பள்ளத்தில் சுமார் 400 சதுர அடி அளவில் 216 பயனாளிகளுக்கு சுமார் ரூ.45.50 கோடியில் பொதுப்பணித்துறை மூலமாக ஸ்மார்ட் சிட்டி நிதியில் இருந்து அடுக்குமாடி வீடுகள் கட்டப்படுகிறது.
வாழைக்குளம் பகுதியில் ஒரு பயனாளிக்கு சுமார் ரூ.9 லட்சத்து 9 ஆயிரம் செலவில் அடுக்குமாடி வீடு கட்டப்படுகிறது. ஆனால் குமரகுரு பள்ளத்தில் ஒரு பயனாளிக்கு சுமார் ரூ.21 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் அடுக்குமாடி வீடு கட்டப்படுகிறது இது என்ன நாயம் இதில் முறைகேடு நடந்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.
மேலும் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணியா என்ற கேள்விக்கு பதில் அளித்த அன்பழகன்... பாஜக ஒரு மதவாத கட்சி அதனுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை எடப்பாடி சொன்னால் கடலில் கூட குதிப்போம் குளத்தில் நீச்சல் அடிப்போம் திமுகவை போன்று வாய வாடகை விட்டுப் பிழைக்கும் கூட்டம் நாங்கள் அல்ல இன்று பதில் அளித்தார்.
கோவிலுக்கு பெண்கள் அரைகுறை ஆடையுடன் வருவதால் சாமி கும்பிடும் போது பக்தனின் மனம் பாதிக்கிறது எனவே ஆடை கட்டுப்பாடு வேண்டும் என்று குறிப்பிட்ட அன்பழகன் புதுச்சேரியில் வெள்ளி சனி ஞாயிறு தினங்களில் புதுச்சேரியில் அதிகமாக போக்குவரத்து நெரிசல் உள்ளது
அந்த மூன்று நாட்களும் புதுச்சேரி வாசிகளுக்கு சொந்தம் இல்லை எனவே கோவிலுக்கு வரும்போது பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் வீடுகள் தோறும் விபச்சாரம் நடக்கிறது ஒயிட் டவுனாக இருக்கும் புதுச்சேரி தற்போது ரெட் டவுனாக மாறி வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.