- முகப்பு
- புதுச்சேரி
- தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பெங்களூரில் வாங்கி புதுச்சேரியில் உள்ள கடைகளுக்கு விற்பனை.
தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பெங்களூரில் வாங்கி புதுச்சேரியில் உள்ள கடைகளுக்கு விற்பனை.
சக்திவேல்
UPDATED: Oct 5, 2024, 1:24:15 PM
புதுச்சேரி
புதுவையில் போதைப் பொருள்கள் மற்றும் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கையில் காவல்துறை டி.ஜி.பி. உத்தரவின் பேரில் தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பெத்து செட்டிபேட் சுப்பிரமணியர் கோவில் தெருவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் லாஸ்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் அன்சர் பாஷா தலைமையிலான தனிப்படை போலீசார்
பெத்துசெட்டிபேட்டை பகுதிக்கு சென்று விசாரித்தனர். அந்த விசாரணையில் சந்தேகத்திற்கிடமாக நின்று இருந்த செந்தில்வேலன் மற்றும் முகேஷ்குமார் ஆகிய இரண்டு நபர்களைபிடித்து விசாரித்தனர்.
போதைப் பொருள்கள்
விசாரணையில் அவர்கள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களான ஹான்ஸ் (HANS), கூல் லிப் (Cool Lip) விமல் பான் மசாலா(Vimal Pan Masala) போன்ற பொருட்களை பெங்களூரில் இருந்து வாங்கிவந்து இங்கே பதுக்கி வைத்து மற்ற கடைகளுக்கு விற்பனை செய்ததை ஒத்துக்கொண்டனர்.
மேலும் அந்த இடத்தை சோதனை செய்தலில் 26மூட்டைகளில் 146 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து இரண்டு நபர்களையும் கைது செய்து 146 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை கைப்பற்றி அவர்கள் மீதுவழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
Latest Crime News In Tamil
கைது செய்யப்பட்ட குற்றவாளி முகேஷ்குமார், மீது கோரிமேடு காவல் நிலையத்தில் மற்றொரு வழக்கிலும் சம்பந்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விற்பனை செய்யப்படும் பான் மசாலா கூல் லிப் போன்ற போதை பொருட்களில் கலப்படம் செய்தும் இவர்கள் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது மேலும் இது குறித்தும் போலீசார் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
Online News In Tamil
இதுகுறித்து எஸ். பி. வீரவல்லவன் கூறும்போது :
புதுவையில் புகையிலை பொருட்கள் விற்பனை சம்பந்தமாக 133 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் ஆறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
மேலும் கடந்த ஆண்டு (2023) 250-க்கும் மேற்பட்ட போதை பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.