• முகப்பு
  • புதுச்சேரி
  • முதலமைச்சர் ரங்கசாமியும், அமைச்சர் நமச்சிவாயமும் தனது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் நாராயணசாமி ஆவேசம்.

முதலமைச்சர் ரங்கசாமியும், அமைச்சர் நமச்சிவாயமும் தனது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் நாராயணசாமி ஆவேசம்.

சக்திவேல்

UPDATED: Nov 14, 2024, 12:18:40 PM

புதுச்சேரி

மறைந்த பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் கடற்கரையில் உள்ள நேருவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் காங்கிரஸ் கட்சித் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி  உழவர்கரை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் அலுவலகத்திற்கு நேரில் சென்று ராம் என்ற ரவுடி எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

நாராயணசாமி

அந்த ரவுடி ராமு மீது 21 வழக்குகள் நிலுவையில் உள்ளது இதில் கொலை, கொள்ளை, வழிப்பறி, என 21 வழக்குகள் நிலுவையில் உள்ளது, இதில் 10 வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை, இந்த ரவுடி முதலமைச்சர் ரங்கசாமி தொகுதி சேர்ந்தவர் என்றார்.

ரங்கசாமி 2011-ல் இருந்து 16 வரை முதலமைச்சராக இருந்த பொழுது முதலமைச்சர் வீட்டு முன்பே படுகொலை சம்பவம் நடந்துள்ளது,

அதன் பிறகு காங்கிரஸ் பொறுப்பேற்ற பிறகு 2016-ல் இருந்து 21 வரை 13 ரவுடிகள் கைது செய்யப்பட்டு குன்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதாக நாராயணசாமி தெரிவித்தார். 

முதல்வர் ரங்கசாமி

ஆனால் இந்த ஆட்சியில் 21 வழக்குகள் உள்ள பிரபல ரவுடி வெளியில் நட மாடுகிறார், அப்படி என்றால் காவல்துறையை கட்டி போட்டது யார்? முதல்வர் ரங்கசாமியும் நமச்சிவாயமும் காவல்துறையை செயல்பட விடாமல் ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். 

காவல்துறையில் முதலமைச்சர் மற்ற அமைச்சர்கள் தலையீடு இருப்பதால் காவல் துறையால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை, கொலை கொள்ளை கற்பழிப்பு சொத்துக்கள் பறிப்பது, வீடு அபகரிப்பு, செயின் பறிப்பு, தொடர் வழிப்பறி, உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ரங்கசாமி எப்போதெல்லாம் முதலமைச்சராக வருகிறாரோ அப்போதெல்லாம் இது போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.

காங்கிரஸ் ஆட்சி

ஆனால் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருந்தது குற்றவாளிகளை கைது செய்தோம், நில அபகரிப்புகளை தடுத்தோம், ஆனால் இன்று பிரான்ஸ் நாட்டில் உள்ளவர்களின் சொத்துக்கள் புதுச்சேரியில் பாதுகாக்க முடியவில்லை, அவர் சொத்துக்கள் அபகரிக்கப்படுகிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். 

வெளியூரிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் புதுச்சேரி வாசிகளை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள், ரங்கசாமி மற்றும் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் செயல்படும் காவல்துறை சேவகம் செய்யும் துறையாக மாற்றப்பட்டுள்ளது.

நமச்சிவாயம்

இன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பில்லை, நாளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு இருக்காது,சாதாரண மக்களுக்கு கூட பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என்றால் இந்த ஆட்சி புதுச்சேரியில் இருந்து என்ன பயன் என்ற கேள்வி எழுப்பிய நாராயணசாமி,

ரங்கசாமி எதற்காக முதல்வராக இருக்க வேண்டும்,நமச்சிவாய எதற்காக அமைச்சராக இருக்க வேண்டும் இவர்கள் ராஜினாமா செய்து விட்டு வெளியே வர வேண்டும் என்று ஆவேசமாக தெரிவித்தார்.

பேட்டி: நாராயணசாமி, முன்னாள் முதலமைச்சர் புதுச்சேரி

 

VIDEOS

Recommended