- முகப்பு
- புதுச்சேரி
- புதுச்சேரியில் புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது - முதலமைச்சர் ரங்கசாமி
புதுச்சேரியில் புயலை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது - முதலமைச்சர் ரங்கசாமி
சக்திவேல்
UPDATED: Nov 27, 2024, 10:50:17 AM
புதுச்சேரி
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறும் என்று வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், புயலை எதிர்கொள்வது குறித்தும் புதுச்சேரியில் முன்னெச்சக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் அனைத்து துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் சட்டப்பேரவையில் நடைபெற்றது.
இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், சபாநாயகர் செல்வம், தலைமை செயலர் சரத் சவுகான், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, பொதுப்பணித்துறை, மின்துறை, சுகாதாரத்துறை,உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
முதலமைச்சர் ரங்கசாமி
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி...
புயல் சென்னை பரங்கிப்பேட்டை இடையே தான் கரையை கடக்கும் என கூறியுள்ளனர்.புதுச்சேரியில் புயல் கரையை கடக்கும் என இருந்தால் அதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளது.
மழை நீர் தேங்காத வகையில் 60 மின் மோட்டர் பொருத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடலுக்கு சுற்றுலா பயணிகள் செல்லாத வகையில் அறிவுறுத்தப்பட்டள்ளது.
ஃபெங்கல் புயல்
தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் தங்குவதற்காக 121 நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தேவைப்பட்டால் உணவுகள் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்த முதலமைச்சர் ரங்கசாமி பேரிடர் மேலாண்மை நிதி தேவையான அளவு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மழை நேரத்தில் அரசு அனைத்து துறைகளும் சரியான பணியை மேற்கொண்டு வருகின்றனர் காலாப்பட்டு கடற் பகுதியில் கடல் அரிப்பை தடுப்பதற்காக கற்கள் கொட்டப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.