- முகப்பு
- மாவட்டச் செய்தி
- டீயுடன், பிஸ்கட் சேர்த்து சாப்பிட்ட 3 வயது பெண் குழந்தை பரிதாப பலி.
டீயுடன், பிஸ்கட் சேர்த்து சாப்பிட்ட 3 வயது பெண் குழந்தை பரிதாப பலி.
L.குமார்
UPDATED: Nov 25, 2024, 11:32:19 AM
திருவள்ளூர் மாவட்டம்
கும்மிடிப்பூண்டி அடுத்த குருவராஜ கண்டிகையில் வாழ்ந்து வருபவர் கூலி தொழிலாளி அரிகிருஷ்ணன் (33). இவரது மனைவி அமுலு (27). இவர்களது 3 வயது பெண் குழந்தை வெங்கடலட்சுமி தேகலா இன்று காலை வீட்டில் டீயுடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிட்டபோது அவருக்கு புரையேறி மூச்சு திணறியதாக கூறப்படுகிறது.
Breaking News Today In Tamil
குழந்தையை, சிகிச்சைக்காக செங்குன்றம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்துச் சென்ற நிலையில் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பெண் குழந்தை வெங்கடலட்சுமி தேகலா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
Latest News Today In Tamil
இதனையடுத்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.