கும்பகோணம் அருகே அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் மருத்துவர் இல்லாததால் நோயாளிகள் அவதி....

ஆர். தீனதயாளன் 

UPDATED: Dec 24, 2024, 8:50:34 AM

தஞ்சாவூர் மாவட்டம்

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை அமைந்துள்ளது.

இந்த மருத்துவமனைக்கு பட்டீஸ்வரம், சோழன் மாளிகை, தேனாம்படுகை, திருவலஞ்சுழி, ஆரியப்படையூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து குழந்தைகள் முதல் கர்ப்பிணி பெண்கள், பெரியவர்கள் வரை மருத்துவம் பார்ப்பதற்கு வருகின்ற முக்கியமான மருத்துவமனையாக இருக்கிறது.

இந்நிலையில் இரவு நேரங்களில் மருத்துவர் பரிசோதனைகள் இல்லாமல் நோயாளிகள் பரிதவிக்கின்றனர். 

அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை

மேலும் செவிலியர் மட்டும் பணியில் இருப்பதாலும் , கடுமையான காய்ச்சல் மற்றும் பிற நோயாளிகள் வந்தால் கும்பகோணம் பெரியாஸ்பத்திரி அல்லது தனியார் கிளினிக்கில் பார்த்துக் கொள்ளும்படி கூறுகிறார்கள் என நோயாளிகள் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர் இல்லாததால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

உடனடியாக மாவட்ட சுகாதார நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு இரவு நேரங்களில் பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவமனைக்கு இரவு நேர பணியில் மருத்துவர்கள் இல்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

Latest Kumbakonam News Today In Tamil 

மேலும் பொதுமக்களின் நலன் கருதி இரவு நேர பணியில் மருத்துவரை பணியில் அமர்த்த நோயாளிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் எம்பி. எம்எல்ஏ. அமைச்சர், உள்ள தொகுதி என்பதால் அவர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் , மாவட்ட மருத்துவமனை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended