- முகப்பு
- மாவட்டச் செய்தி
- அமித்ஷா மன்னிப்பு கேட்டு பதவி விலக வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
அமித்ஷா மன்னிப்பு கேட்டு பதவி விலக வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
செ.சீனிவாசன்
UPDATED: Dec 24, 2024, 12:50:09 PM
நாகப்பட்டினம் மாவட்டம்
சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் குறித்து நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குள்ளான கருத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து இருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பகுஜன் சமாஜ் கட்சியினர் மாவட்ட தலைவர் யூ. தமிழரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பகுஜன் சமாஜ் கட்சி
ஆர்ப்பாட்டத்தில் அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய அமித்ஷாவை கண்டித்தும், அமித்ஷா மன்னிப்பு கோர வலியுறுத்தியும், பதவி விலக வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், கீழ்வேளூர் சட்டமன்ற பொறுப்பாளர் வசந்த், நாகப்பட்டினம் பாராளுமன்ற வேட்பாளர் ஜெகதீஸ், திருவாரூர் மாவட்ட தலைவர் எஸ். ராஜபாண்டியன், திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி.இமான்வேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.