• முகப்பு
  • தமிழ்நாடு
  • மத்திய அரசின் கீழ் உள்ள தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறிவைப்பது ஏன் ? வெங்கடேசன் எம்.பி. கேள்வி ?

மத்திய அரசின் கீழ் உள்ள தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறிவைப்பது ஏன் ? வெங்கடேசன் எம்.பி. கேள்வி ?

கார்மேகம்

UPDATED: Dec 23, 2024, 6:04:07 AM

மதுரை

மதுரை எம்.பி. வெங்கடேசன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளதாவது

மத்திய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறிவைப்பது ஏன் ?

மத்திய அரசின் கீழ் உள்ள தேர்வு முகமைகள் அறிவிக்கிற பல தேர்வுகள் பொங்கல் விடுமுறை நாட்களில் அறிவிக்கப்படுவது தொடர் கதையாகி விட்டது கடந்த மாதம் தான் பொங்கல் திருநாள் அன்று அறிவிக்கப்பட்டிருந்த பட்டய கணக்காளர் ( ஜிஏ) தேர்வு தேதியை போராடி மாற்றினோம்

நெட் தேர்வு

இப்பொழுது மீண்டும் இன்னொரு அறிவிப்பு வந்துள்ளது தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ள ( யூ ஜி சி) நெட் தேர்வு அட்டவணையில் 30 பாடங்கள் மீதான தேர்வுகள் ஜனவரி 15. 16. தேதிகளில் வருகிறது

ஜனவரி 14 அன்று பொங்கல் ஜனவரி 15 திருவள்ளுவர் தினம் ஜனவரி 16 உழவர் திரு நாள் என தொடர் விடுமுறை இருந்தும் மேற்கண்ட தேதிகளில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன

பொங்கல் காலம் என்பது தமிழர்களுடைய பண்பாட்டோடு உழவர் பெருமக்களின் உணர்ச்சிப் பூர்வமாண   தொடர்புடையதாகும்

வெங்கடேசன் எம்.பி.

ஆகவே இந்த தேதிகளில் தேர்வுகள் நடத்தப்படுவது மிகப்பெரும் சிறமங்களை தங்களுக்கு தரும் என்று தேர்வர்களும் அவர் தம் பெற்றோர்களும் என்னை தொடர்பு கொண்டு தலையீட்டை  நாடியுள்ளனர்

ஆகவே இந்த தேர்வு தேதிகளை  மாற்றுமாறு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கும் தேசிய  தேர்வு முகமை பொது இயக்குனர் பிரதாப் சிங் கரோலா இ.ஆ.ப.அவர்களுக்கும் கடிதங்களை எழுதி உள்ளேன் இவ்வாறு வெங்கடேசன் கூறியுள்ளார். 

 

VIDEOS

Recommended