தமிழக அரசு வன்னியர்களுக்கு 10.5 % இட ஒதுக்கீடு வழங்காததை கண்டித்து அன்புமணி ராமதாஸ் போராட்டம்

லட்சுமி காந்த்

UPDATED: Dec 24, 2024, 9:42:32 AM

காஞ்சிபுரம் மாவட்டம்

உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 1000 நாட்கள் கடந்த போதிலும் வன்னியர்களுக்கு 10.5% சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த வகையில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

வன்னியர்களுக்கு 10.5 % இட ஒதுக்கீடு 

இந்த ஆர்ப்பாட்டத்தில் போது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 1000 நாட்கள் கடந்தும் தமிழக அரசு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்காதது ஏன் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தமிழக அரசு உடனடியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என முழக்கங்கள் இட்டன.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் பெ.மகேஷ் குமார் மாவட்ட தலைவர் உமாபதி, காஞ்சிபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி கமலாம்பாள், உள்ளிட்ட ஏராளமான வன்னியர் சங்கத்தினர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் கலந்து கொண்டனர்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended