அண்ணாமலை முதலில் வார்டு மெம்பர் தேர்தலில் நின்று ஜெயிக்கட்டும் - ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர்
JK
UPDATED: Dec 24, 2024, 1:07:07 PM
திருச்சி
தந்தை பெரியாரின் 51வது நினைவு தினத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் சோம்பரசன்பேட்டையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி :
தந்தை பெரியார் தமிழகத்தில் பிறக்கவில்லை என்றால் நல்ல வேஷ்டி, சட்டை கட்டி ஜனநாயகமாக நடமாட முடியாது, நம்மை அரசு பணியிலும் சரி மக்களுக்கு நிகர் மக்களாக நடமாட வைத்தவர் பெரியார்.
திமுக
திமுக 200தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என்று அண்ணாமலை கூறியுள்ளார் என்ற கேள்விக்கு ?
அவனுக்கு டெபாசிட் போகும்னு சொல்லி இருப்பார்.
திமுக 75வருட கட்சி, இந்த முறை 200சீட்டுகள் மேல் பெற்று வெற்றி பெறப் போகிறார்.
அண்ணாமலை
அண்ணாமலை சொந்த ஊர் அரவாக்குறிச்சியில் நின்றார் டெபாசிட் கிடைக்கவில்லை, கோயம்புத்தூரில் நின்றும் ஜெயிக்கவில்லை,
முதலில் அவரது சொந்த ஊர் அரவக்குறிச்சியில் வார்டு மெம்பருக்கு நின்று ஜெயிக்கட்டும் அதன் பிறகு அவர் அரசியல் பற்றி பேசலாம் என தெரிவித்தார்.