- முகப்பு
- மாவட்டச் செய்தி
- குடியிருக்க இடமின்றி, இலவச வீட்டுனை கேட்டு, விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளை மாதக்கணக்கில் அலையவிடும் அதிகாரிகள்.
குடியிருக்க இடமின்றி, இலவச வீட்டுனை கேட்டு, விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளை மாதக்கணக்கில் அலையவிடும் அதிகாரிகள்.
லட்சுமி காந்த்
UPDATED: Dec 23, 2024, 3:06:54 PM
காஞ்சிபுரம் மாவட்டம்
ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன் கேட் பகுதியில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில தலைவர் தோ. வில்சன் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடும்பத்துடன் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.
மாநில துணைத்தலைவர் கே பி.பாபு கூறுகையில், ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016 படி மாற்றுத்திறனாளிகளுக்கு கண்ணியமான வாழ்க்கையை ஏற்படுத்தி, கொடுக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் அவர்களின் அடிப்படை தேவைகளை கூட செய்து கொடுக்காமல் அவர்களை கண்ணீரில் அலையவிடும் போக்கு தொடர்கிறது .
மாற்றுத்திறனாளிகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வீடற்ற மாற்று திறனாளிகள் தங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க கேட்டதின் அடிப்படையில் , தகுதியான பயனாளிகளும் தேர்வு செய்யப்பட்டது.
தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இதுநாள் வரையில் வீட்டுமனை வழங்கப்படவில்லை. மேலும், இது தொடர்புடைய அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்பட்டு புதிய அதிகாரிகள் பொறுப்பேற்கும் போது அவர்களும் ஏதேனும் காரணம் கூறி காலம் கடத்துவதும், மாற்றுத்திறனாளிகள் குடியிருக்க உகந்த இடத்தை தேர்வு செய்யாததும், அதிகாரிகளின் அலட்சிய போக்கை காட்டுகிறது.
இலவச வீட்டுமனை
இதனை வன்மையாக கண்டிப்பதோடு, விண்ணப்பித்து தகுதியான அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உடனே இலவச வீட்டுமனை வழங்கிட வேண்டும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், அவர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள படி 4 மணி நேர வேலை, இலகுவான வேலை, முழு ஊதியம் உறுதி செய்யப்பட வேண்டும்.
மாற்றுத்திறனாளி குடும்பத்தாரின், குடும்ப அட்டைகளையும் AAY குடும்ப அட்டைகளாக மாற்றி அவர்களுக்கு 35 கிலோ இலவச அரிசி வழங்கிட வேண்டும்.
மாற்றுத்திறனாளி அலுவலகம் மூலம் வழங்கும் உதவித்தொகை ரூ.2,000/- காத்திருப்போர் பட்டியிலில் உள்ள அனைவருக்கும் உடடினயாக வழங்க வேண்டும்,
Latest Kanchipuram News In Tamil
மாற்றுத்திறனாளிகளுக்கு தாலுக்கா அளவில் சிறப்பு முகாம் நடத்தி அவர்கள் அனைவருக்கும் உடனே UDID தனித்துவ அட்டை வழங்கிட வேண்டும். இருசக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு உடனே ஒட்டுநர் உரிமம் வழங்கிட வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ஒரு முறை கோட்டாட்சியர் தலைமையிலும், இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், மூன்று மாதத்திற்கு ஒரு முறை வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலும், சிறப்பு குறைதீர் கூட்டங்களை முறையாக நடத்திட வேண்டும்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்
ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் 200 க்கும் மேற்பட்டவர்கள் குடும்பங்களுடன் குடியேறியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பேட்டி. .கேபி.பாபு TARATDAC மாநிலத் துணைத்தலைவர்.