அமித்ஷா பதவி விலக கோரி திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

JK

UPDATED: Dec 20, 2024, 10:03:19 AM

திருச்சி

சட்டமேதை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரை பாராளுமன்றத்தில் அவமரியாதை செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தி வருகின்றனர்

இந்நிலையில் திருச்சி இ.பி ரோடு பகுதியில் உள்ள அம்பேத்கார் சிலை முன்பு திருச்சி காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி விலக கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாமன்ற உறுப்பினர் கோவிந்தராஜ், செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

VIDEOS

Recommended