- முகப்பு
- மாவட்டச் செய்தி
- திருச்சியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே வாக்குவாதம்
திருச்சியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே வாக்குவாதம்
JK
UPDATED: Dec 18, 2024, 12:58:24 PM
திருச்சி மாவட்டம்
திருச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து ஏற்பட்ட கனமழையின் காரணமாக திருச்சி மாநகராட்சி 61 வது வார்டு காஜாமலை மெயின் ரோடு, ஜேகே நகர், லூர்து நகர், ரோஜா நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிக அளவு தண்ணீர் தேங்கி நின்றது. மழை நின்றும் 5நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வடியாமல் இருந்த தண்ணீர் சாலைகளில் தேங்கக்கூடாது என்பதற்காக
திருச்சி மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீரை திருப்பிவிட்டதால் வீடுகளை மழை தண்ணீர் சூழ்ந்த வெள்ளம் போல காட்சி அளித்தது.
சாலை மறியல்
தொடர்ந்து அப்பகுதி மக்கள் தண்ணீரை அகற்ற வலியுறுத்தி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை இடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதிப் பொதுமக்கள் காஜாமலை - கேகே நகர் மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
Trichy News In Tamil
ஆனால் பேச்சுவார்த்தையை ஏற்றுக் கொள்ளாததால் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அரசும், மாநகராட்சியும் கண்டுகொள்ளவில்லை என்றும் அதனாலேயே குடியிருப்பு பகுதிகளில் தண்ணீரை திருப்பிவிட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டினர்.
தொடர்ந்து அங்கு அப்பகுதி மாமன்ற உறுப்பினர் ஜாஃபர் அலி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாத நிலையில் சம்பவ இடத்திற்கு கிழக்கு சட்டமன்ற இனிகோ இருதயராஜ் வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உயிர் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் இதனை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.