• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ஆண்டிபட்டி அருகே வாய்க்கால் பாறை கிராமத்தில் குடிநீர், கழிப்பறை, சாலை , சுற்றுசுவர் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் செயல்பட்டு வரும் அரசு பள்ளி.

ஆண்டிபட்டி அருகே வாய்க்கால் பாறை கிராமத்தில் குடிநீர், கழிப்பறை, சாலை , சுற்றுசுவர் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் செயல்பட்டு வரும் அரசு பள்ளி.

ராஜா

UPDATED: Dec 23, 2024, 10:49:19 AM

தேனி மாவட்டம்

ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட மலைக் கிராமமான வாய்க்கால்பாறையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 

120 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வாய்க்கால்பாறை மற்றும் அருகே உள்ள ஆத்துக்காடு ஆட்டுப்பாறை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து இங்கு சென்று பயின்று வருகின்றனர். 

இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 8 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இந்த பள்ளிக்கு வாய்க்கால்பாறை கிராமத்தில் இருந்து பள்ளி செல்ல பயன்படுத்தப்படும் 2கிலோமீட்டர் தொலைவிலான சாலைப்பாதை 

மிகவும் சேதம் அடைந்து கருங்கற்களாக பெயர்ந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காட்சி அளிக்கிறது.

Latest Theni News Today In Live

இந்த சாலையில் செல்லும் மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் அடிக்கடி கீழே விழுந்து காயம் ஏற்படுவதாகவும் 

மேலும் இந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வரும் பெற்றோர்களும் விவசாய தோட்டம் உள்ளிட்ட பணிகளுக்கு செல்லும் விவசாயிகளும் வாகனத்திலிருந்து நிலை தடுமாறி விழுந்து காயம் ஏற்படுவதாகவும்  இருசக்கர வாகனங்கள் பழுதாவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் வசிப்பவர்கள் இதனால் இப்பள்ளி மாணவ மாணவிகள் பாம்பு உள்ளிட்ட விஷபூச்சிக்கள் வசிக்கும் ஆபத்து நிறைந்த காட்டுபாதையை பயன்படுத்தி பள்ளிக்கு செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

ஆபத்தாகவும், கடினமாகவும் இருந்தாலும் எளிய தூரத்தில் இருப்பதால் ஒரு வித அச்சத்துடனே வேறு வழியின்றி இந்த சாலையை மாணவ மாணவிகள் பயன்படுத்தி செல்கின்றனர்.

Breaking News Today In Tamil 

மேலும் இப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்காக கட்டப்பட்ட கழிப்பறை கட்டிடங்கள் மிகவும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத அவல நிலையில் உள்ளது.

பள்ளியில் குடிப்பதற்கான தண்ணீர் இல்லை என்றும் இதனால் வீடுகளில் இருந்து தண்ணீர் பாட்டில்களில் கொண்டு வந்து குடித்து வருவதாகவும் கூறுகின்றனர்.

மேலும் இப்பள்ளி ஊருக்கு வெளியே காட்டுப் பகுதியில் அமைந்துள்ளதால் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் பள்ளி வளாகங்களிலேயே மது அருந்திவிட்டு பாட்டில்களை விட்டுசெல்வதாகவும் அவ்வப்போது கட்டிடங்களையும் சேதப்படுத்தி செல்வதாகவும் இதனால் பள்ளி வளாகத்தில் ஒரு பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாகவும் மாணவ மாணவிகள் குற்றம் சாட்டுகின்றனர்

District News Headlines in tamil

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள்  ஊராட்சி நிர்வாகம் முதல் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் தற்போது வரை சாலை அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள படவில்லை 

இதனால் நாள்தோறும் மாணவ மாணவியர்கள் மிகுந்த சிரமப்பட்டு பள்ளிக்கு சென்று வரும் அவலநிலையே தொடர்கிறது.

எனவே தங்களது பள்ளிக்கு சாலை வசதி,குடிநீர் வசதி,கழிப்பறை வசதி,சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் விரைந்து செய்து தரவேண்டும் என பள்ளி மாணவ மாணவிகள் சார்பாக மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended