புவனகிரி அருகே வீரமுடையாநத்தம் கிராமத்தில் மணிலா விதைப்பு செய்யப்பட்ட வயல்கள் முற்றிலும் சேதம்.
சண்முகம்
UPDATED: Dec 24, 2024, 10:53:09 AM
கடலூர் மாவட்டம்
புவனகிரி அருகே வீரமுடையாநத்தம் கிராமம் இருந்து வருகிறது. இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மணிலா விதைப்பு செய்தனர்.
அப்போது பெய்த மழையானது வயலில் தேங்கி தண்ணீர் வடிய வழி இல்லாமல் விதைப்பு செய்யப்பட்ட மணிலா பயிர்கள் அழுகிப்போயின.
இதனால் நூற்றுக்கு மேற்பட்ட ஏக்கர் பாதிப்பு ஏற்பட்டது. மணிலா பயிர்கள் அழுகுவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது
விவசாயிகள் கோரிக்கை
இப்பகுதியில் வடிகால் வாய்க்கால் இருந்தது எனவும் காலப்போக்கில் பராமரிக்காமல் விட்டு விட்டதால் அது மறைத்து விட்டது எனவும் இதனை தூர்வாரி வயல்களில் தண்ணீரை வடிய வைக்க கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை.
முதல் விதைப்பு செய்யப்பட்ட மணிலா பயிர்கள் அழுகி போய்விட்டதால் தற்போது இரண்டாவது முறையாக பயிர் விதைப்பு செய்து வருகின்றனர்.
இதனால் ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு ஏற்பட்டுள்ளதாகவும் தங்களுக்கு நிரந்தர வடிகால் வசதி ஏற்படுத்தித் தந்து ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.