• முகப்பு
  • விவசாயம்
  • தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை குண்டு கட்டாக தூக்கி கைது செய்தது காவல்துறை.

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை குண்டு கட்டாக தூக்கி கைது செய்தது காவல்துறை.

JK

UPDATED: Dec 16, 2024, 10:17:50 AM

திருச்சி

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு லாபகரமான விலையை வேண்டியும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யும் மத்திய அரசு விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய மறுக்கும் மத்திய அரசை வலியுறுத்தியும் , விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தொடர வேண்டியும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய கிராமங்கள் தோறும் விற்பனை மையங்கள் அமைக்க வலியுறுத்தியும். டெல்லியில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளும் , போராடும் விவசாயிகளை தாக்கும் மத்திய அரசு கண்டித்தும் 

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் ரயில் மறியலில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நிலையில், காவல்துறையினர் தடுத்ததால் ரயில் நிலையம் முன்பு சாலையில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளின் தர்ணா போராட்டத்தால் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகளை குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றி கைது செய்தனர்.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஐயாக்கண்ணு

விவசாயிகளின் நியாயமான கோரிக்கை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டு, நடைபெற்று வருகிறது

ஆனால் திருச்சியில் காவல்துறையினர் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்.

இது போன்று தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அடுத்த கட்டமாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபடுவோம் என்றும் எச்சரிக்கையுடன் தெரிவித்தார்.

மேலும், அண்டை மாநிலமான புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஐந்தாயிரம் தரும்போது தமிழக அரசு 2000 மட்டும் தருவது நியாயமா, பயிர்கள் முழுவதுமாக வெள்ளத்தில் அழிந்துள்ள நிலையில் ஏக்கருக்கு 40,000 வழங்க வேண்டிய அரசு பணத்தை கிள்ளி போடுவது நியாயம் இல்லை.

அதே நேரம் டெல்லியில் சென்று போராடி விவசாயிகளுக்கான பணத்தை பெற்று தர வேண்டிய விவசாயிகளையும் காவல்துறையை வைத்து மறித்து போராட்டத்தை ஒடுக்குகிறது சரியான வழிமுறை இல்லை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended