• முகப்பு
  • அரசியல்
  • இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகம் முற்றிலுமாக அகற்றப்பட்டு விட்டது - திருச்சி சிவா குற்றச்சாட்டு

இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகம் முற்றிலுமாக அகற்றப்பட்டு விட்டது - திருச்சி சிவா குற்றச்சாட்டு

JK

UPDATED: Dec 15, 2024, 2:10:31 PM

திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் :

பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்ற பேச்சில் எந்த புதிய அம்சங்களும் இடம் பெறவில்லை.

இந்த கூட்டத் தொடர் முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி அவைக்கே வரவில்லை முன்பெல்லாம் கேள்வி நேரத்திற்கு மட்டும் வருவார் இப்பொழுது அதற்கு கூட வருவதில்லை.

நாடாளுமன்றத்தில் நாங்கள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு பதில் சொல்ல யாரும் முன் வருவதில்லை.

திருச்சி சிவா

மணிப்பூர் பிரச்சனை, அதானி பிரச்சனை, சம்பல் பிரச்சனை குறித்தெல்லாம் நாங்கள் கேள்வி எழுப்பினால் சம்பந்தப்பட்ட அமைச்சர் அவைக்கு வந்து பதில் அளிப்பதில்லை.

இது போன்ற பிரச்சனைகள் குறித்து நாங்கள் பேச முற்பட்டாலும் எங்களுக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை.

நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது தற்பொழுது முற்றிலுமாக அகற்றப்பட்டு விட்டது.

ஆளுங்கட்சியினர் பேசுவது மட்டுமே அவை குறிப்பில் ஏற்றப்படுகிறது நாங்கள் பேசுவது எதையும் அவை குறிப்பில் ஏற்றுவதில்லை.

இதனால் எதிர்க்கட்சிகள் தான் அமளி செய்கிறார்கள் என பொதுமக்களிடம் ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி

இதற்கு முன்பெல்லாம் நாடாளுமன்றம் இது போன்று நடந்ததில்லை. 

எல்லா பிரதமர்களும் பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார்கள் ஆனால் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுகளில் பத்திரிகையாளர்களே சந்தித்ததில்லை.

இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி மறைக்கப்படாத ஒரு அத்தியாயம் தான் அது அறிவிக்கப்பட்ட அவசர நிலையாக இருந்தது. ஆனால் தற்பொழுது அறிவிக்கப்படாத அவசரநிலை நடந்து கொண்டிருக்கிறது.

UAPA உள்ளிட்ட சட்டங்களில் கூட பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள். 

மணிப்பூரில் 215 நாட்கள் இணையதள சேவையை இல்லாமல் இருந்துள்ளது. 

மணிப்பூரில் தொடர்ந்து பிரச்சனை நிலவி வருகிறது ஒன்றுமில்லாத பிரச்சனைக்கெல்லாம் சட்டம் ஒழுங்கு சரியில்லை என கூறுபவர்கள் மணிப்பூரில் நடந்து வரும் பிரச்சனை குறித்து பதில் சொல்ல வேண்டும். 

ஒரே நாடு ஒரே தேர்தல்

பிரதமர் நரேந்திர மோடி பேசுவது உண்மையைப் போல் தோற்றம் அளிக்கிறது அவர் மக்களை நம்ப வைக்க பார்க்கிறார். வெளியில் பேசும் போது அலங்காரமாக பேசுகிறார்கள்.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாளை மக்களவில் தாக்கல் செய்யப்பட கூடும் என சொல்லப்பட்டுள்ளது அது தாக்கல் செய்யப்பட்டால் அதை கூட்டு நடவடிக்கை குழுவிற்கு கொண்டு செல்ல வேண்டும் என நாங்கள் வலியுறுத்துவோம்.

இது குறித்து ஆழமான விவாதத்தை நடத்த வலியுறுத்துவோம்

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு கருத்து கேட்டார்கள், விசாரித்தார்கள் என கூறுகிறார்கள் ஆனால் யாரிடம் தான் என தெரியவில்லை. 

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை திமுக கடுமையாக எதிர்க்கிறது.

நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் போது அதை எதிர்ப்பது எங்களுடைய கடமை நடப்பது என்னவென்று பொறுத்திருந்து பாருங்கள்.

பாஜக

இந்தியா என்பது பல்வேறு கலாச்சாரங்களை, பல்வேறு இனங்களை கொண்ட நாடு ஒரு மாநிலத்திற்கு கொண்டு வரக்கூடிய திட்டம் மற்றொரு மாநிலத்திற்கு பொருந்தாது.

தற்போது நடப்பது பாஜக அரசல்ல இது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு. தேசிய ஜனநாயக கூட்டணி தான் அவரை பிரதமராக தேர்ந்தெடுத்தது. தற்பொழுது கூட்டணி ஆட்சி தான் நடந்து வருகிறது அதில் சில பேர் விலகினால் இந்த ஆட்சி கலையக்கூடும்.

பல காலங்களில் மக்களவை கலைந்துள்ளது. அப்படி ஒருவேளை மக்களவை கலைந்தால் எல்லா சட்டசபையையும் கலைத்துவிட்டு தேர்தல் நடத்துவார்களா? அல்லது ஒரு மாநில சட்டசபை கலைந்தால் எல்லா மாநிலங்களுக்கும் சேர்த்து தேர்தல் நடத்துவார்களா? என கேள்வி எழுப்பினால் நாங்கள் அந்த சட்டமன்றத்திற்கு மட்டும் தேர்தல் நடத்துவோம் என்பார்கள் அப்படி என்றால் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்துவது போல் தான் வரும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா ஆழமாக விவாதித்து நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது நடைமுறைப்படுத்தக் கூடாது என முடிவெடுக்க வேண்டும். உடனடியாக இதை அமல்படுத்த முடியாது.

சிஏஜி அறிக்கை

தமிழகத்திற்கு தேவையான வெள்ள நிவாரண நிதியை தொடர்ந்து கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். மற்ற மாநிலங்கள் என்றால் ஓடோடி உதவி செய்கிறீர்கள் தமிழகத்திற்கு மட்டும் ஓரவஞ்சனை செய்கிறீர்கள் என்பது குறித்து நாங்கள் வலியுறுத்திக் கொண்டுதான் உள்ளோம். 

தொடர்ந்து பிரதமரை அமைச்சர்களை சந்தித்துக் கொண்டுதான் உள்ளோம் மாநில நலன் குறித்து பேசும் பொழுது உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்கிற அடிப்படையில் தான் எங்கள் அணுகுமுறை உள்ளது.

எந்த வகையிலும் நாங்கள் மாநில உரிமைகளை சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.

பல திட்டங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் விரயமாக்கப்பட்டுள்ளது சிஏஜி அறிக்கை மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிக்கொண்டு தான் உள்ளோம் என தெரிவித்தார்.

VIDEOS

Recommended