காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம்.
Bala
UPDATED: Dec 14, 2024, 8:25:39 AM
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம்.
உடல்நலக்குறைவால் கடந்த நவம்பர் 11ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று உயிரிழந்தார்.
தந்தை பெரியாரின் சகோதரர் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரனாகும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
இவர் சென்னை மாநில கல்லூரியில் கல்வி பயின்ற காலத்தில், மாணவரணி காங்கிரஸ் செயலாளராகப் பணியாற்றினார்.
Congress
1984ஆம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2004ஆம் ஆண்டின் மக்களவை தேர்தலில் கோபி தொகுதியில் வெற்றி பெற்று, 2009 வரை மத்திய இணையமைச்சராக பணியாற்றினார்.
2000-02 மற்றும் 2014-16 ஆண்டுகளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பதவி வகித்துள்ளார்.
Latest Political News Paper In Tamil
மகன் திருமகன் ஈவெராவின் மறைவுக்கு பின்பு, 2023ல் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக ஆனார்.
இந்நிலையில் இன்று சுமார் 10.10 மணியளவில் உடல்நிலை குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.
மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்ட இளங்கோவனின் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.