அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

Bala

UPDATED: Dec 15, 2024, 8:17:51 AM

அதிமுக பொதுக்குழு கூட்டம்

அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், ஏற்கெனவே செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்களுடன் சேர்த்து மொத்தம் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

ஃபெஞ்சல் புயல் காலத்தில் சரியான நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்தல்.

சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் அதிக வரிவிதிப்பை எதிர்த்து தீர்மானம்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய திமுக அரசை கண்டித்தல்.

டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை தடுக்க தவறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தல்.

ADMK

மத்திய அரசு இயற்றும் சட்டங்களுக்கு ஹிந்தி பெயரிடுவதை தவிர்த்து ஆங்கில பெயர்கள் வழங்க வலியுறுத்தல்.

ஃபார்முலா 4 பந்தயம் மற்றும் பேனா நினைவுச் சின்ன திட்டங்களுக்கு நிதி வீணடிப்பதை கண்டித்தல்.

குடிமராமத்து திட்டங்களை தொடர முடியாத திமுக அரசை கண்டித்தல்.

கோதாவரி-காவிரி, பரம்பிக்குளம்-ஆழியாறு, பாண்டியாறு-புன்னம்புழா திட்டங்களை நிறைவேற்ற தவறியதற்கான கண்டனம்.

நீட் தேர்வு ரத்து குறித்து மக்களிடம் தவறான தரப்புகளை உருவாக்கியதற்கு திமுக அரசை எதிர்த்து தீர்மானம்.

வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை சரிசெய்ய இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தல்.

எடப்பாடி கே. பழனிசாமி

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திமுக அரசை வற்புறுத்தல்.

இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்காத திமுக அரசுக்கு கண்டனம்.

கல்வியை மாநில பட்டியலில் மீண்டும் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்தல்.

தமிழ்நாட்டிற்கான நிதி பகிர்வில் சமநிலையை நிலைநாட்ட மத்திய அரசை வற்புறுத்தல்.

அதிமுக பொதுக்குழு, 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி கே. பழனிசாமியை மீண்டும் தமிழக முதல்வராகக் காண விரும்புவதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

 

VIDEOS

Recommended