• முகப்பு
  • அரசியல்
  • சுரங்கத்திற்காக அல்ல டாஸ்மாக்குக்காக முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்யுங்கள் - அண்ணாமலை

சுரங்கத்திற்காக அல்ல டாஸ்மாக்குக்காக முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்யுங்கள் - அண்ணாமலை

JK

UPDATED: Dec 10, 2024, 10:28:43 AM

திருச்சி

நாகை மாவட்டத்தில் மறைந்த மாவட்ட தலைவரின் படத்திறப்பு விழாக்காக கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியில் மாநில தலைவர் அண்ணாமலை திருச்சி விமான நிலையத்தில் செய்தி அவர்களுக்கு அளித்த பேட்டியில் .

டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரை வரும் 12ம் தேதி சந்திக்க உள்ளோம். அவரை சந்தித்த பின் ஒரு நல்ல முடிவோடு வருவோம்.

டங்ஸ்டன் விவகாரத்தில் முதலமைச்சர் சட்டமன்றத்தில் நாடகமாடியுள்ளார். முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்றால் டாஸ்மாக் பிரச்சனைக்காக அவர் பதவி விலக வேண்டும்.

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்க்கும் தமிழக அரசு விஸ்வகர்மா திட்டத்திற்கு மாற்று பெயரில் கைவினை கலைஞர்கள் திட்டமிட்டு தமிழக அரசு அமுல்படுத்துகிறது இறுதியில் அவர்கள் மத்திய அரசிடம் தான் நிதி கேட்டு வருவார்கள் அப்படி கிடைக்க விட்டால், வடக்கு வாழ்கிறது தெற்குத் தெரிகிறது என்று வசனம் பேசுவார்கள்.

ஆதிதிராவிட நலத்துறை சார்பில் நடத்தப்படும் தொழிற்பயிற்சியில் முடி திருத்துதல், இஸ்திரி போடுதல் உள்ளிட்ட தொழில்கள் கற்றுத் தரப்படுகின்றன. இது குலக்கல்வி இல்லையா?

விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்பதால் இந்தியாவில் தொடர்ந்து தடை செய்யப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் விடுதலைப் போராட்டமாக ஆரம்பித்த விடுதலைப் புலிகள் போராட்டம் பல்வேறு பழிவாங்கும் படுகொலை நிகழ்த்தியதால் அது பயங்கரவாத இயக்கமாக மாறியது.

எனவே, இலங்கையிலும் இந்தியாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து பேசுவதற்கு ஒன்றுமில்லை.

திருமாவளவன் பிஜேபியை வழி நடத்துவது அதானியா அல்லது மோடியா என்று கேட்டுள்ளாரே என்ற கேள்விக்கு ?

கடந்த சில நாட்களுக்கு முன்பு விசி காவை நடத்துவது திருமாவளவனா அல்லது துணை பொதுச் செயலாளரா என்று நான் கேட்டிருந்தேன்.

அவருக்கு திடீரென கோபம் வந்துள்ளது.

அவர் ஒரு சீனியர் லீடர் கட்சியில் கண்ட்ரோல் இருக்கா என்று கேட்டால் 15 நாட்களாக கட்சி அவரது கண்ட்ரோலில் இல்லை.

புத்தக வெளியீட்டு விழாக்கு போகவில்லை என்பது கூட்டணியில் பிரச்சனை என்பதால் எனக் கூறியுள்ளார்.

புத்தக வெளியிட்டா இருக்கு நான்தான் அனுப்பி உள்ளேன் இன்னும் தெரிவித்துள்ளார் நீங்கள் அனுப்பி இருப்பீர்கள் என்றால் முதல்வருக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார் அது உங்கள் கருத்தா எனவே கட்சி உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கா இல்ல அவரது கட்டுப்பாட்டில் இருக்கா அதற்குத்தான் திருமாவளவன் பேசியுள்ளார்.

மீண்டும் dmk பைல்ஸ் வெளிவருமா என்ற கேள்விக்கு ?

சட்டமன்ற தேர்தல் நெருங்கின்ற வேளையில் திமுக பைல்ஸ்- 3 வெளியிடப்படும். அதில், திமுக மட்டுமல்லாது, அதன் கூட்டணி கட்சிகள் எடுத்த டெண்டர்கள், அதனால் அவர்கள் அடைந்த லாபங்கள் குறித்து அம்பலப்படுத்தப்படும்.

இதில் மூன்றரை வருடத்திற்கான டெண்டர் விவாகரத்தும் புகைப்படத்தோடும் வெளியிடப்படும் டென்டர்கள் அனைத்தும் அமைச்சரின் உறவினருக்குத்தான் சென்றிருக்கும் என தெரிவித்தார்.

பேட்டியின் போது மாவட்ட தலைவர் ராஜசேகர் நிர்வாகிகள் இல.கண்ணன்,  மாலை நிர்வாகி புரட்சிக்கவிதாசன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

 

VIDEOS

Recommended