உதயநிதிக்கு தரக்குறைவாக பேசுவது ஒன்றும் புதிதல்ல - நடிகை கஸ்தூரி
JK
UPDATED: Dec 8, 2024, 12:09:19 PM
திருச்சியில் நடிகை கஸ்தூரி பேட்டி
ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற சனாதான வழக்கறிஞர்கள் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சனாதனி என்ற முறையிலும் சட்டம் படித்தவள் என்ற முறையிலும் நான் கலந்து கொண்டேன்.
மேலும் கடந்த நவம்பர் 3ம் தேதி நான் பேசாத விஷயம் பெரிதுபடுத்தப்பட்டு சர்ச்சைக்குள்ளானது.
அப்போது அந்த கூட்டத்தில் நிறைய விஷயங்களை பேச முடியவில்லை. அதனால் இன்று இந்த கூட்டம் இங்கு நடைபெறுகிறது. இதில் தெளிவாக பல விஷயங்களை கலந்து பேசி உள்ளோம். அதற்கு சட்டபூர்வமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எப்படி அனுகுவது என விவாதித்து உள்ளோம்.
விஜய்
பிராமணர்கள் மீது பொய் வழக்கு போடுவது அவர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை முடிக்கி விடுவது, பிராமணர்கள் என சொல்லக்கூடிய இன துரோகிகளை வைத்து அவர்கள் பக்கம் இழுத்துக் கொண்டு பிரச்சாரங்களை முடுக்கி விடுவது என்பவற்றையெல்லாம் எப்படி எதிர்கொள்வது போன்ற விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார்.
திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெறாது என விஜய் கூறியிருப்பது உண்மை ஆகுமேயானால் அவரது வாய்க்கு சர்க்கரை போடலாம் இதற்கே அவருக்கு ஆதரவு தரலாம் என்றார்.
விசிக தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியை விட்டு வெளியே வருவாரா என்பது எனக்கு தெரியவில்லை ஏனென்றால் அவர் திமுக கூட்டணியின் எம் பி ஆக உள்ளார். பல நாட்களாக வாக்கப்பட்டு அவர் திமுக கூட்டணியில் உள்ளார் அவர் வெளியே வருவாரா என்பது தெரியவில்லை.
உதயநிதி
ஆனால் ஆதவ்அர்ஜுனா இருக்க வேண்டும் அல்லது திருமாவளவன் இருக்க வேண்டும். விடுதலை சிறுத்தைகளில் இவர்கள் இருவரும் இருக்க மாட்டார்கள். ஒருவர் தான் இருப்பார் என்பது மட்டும் தெரியும் என்றார்.
சினிமா செய்திகளை பார்ப்பதில்லை என உதயநிதி கூறுவது தன்னுடைய ரெட் ஜெயண்டை பார்ப்பதில்லை என சொல்லுகிறாரோ என நான் நினைத்தேன்.
உதயநிதிக்கு தரக்குறைவாக பேசுவது ஒன்றும் புதிதல்ல இன்று விஜயை பற்றி பேசியுள்ளார். ஆதவ்அர்ஜீனா பற்றி பேசியுள்ளார்.
அதற்கு முன் சனாதனத்தை பற்றி பேசியுள்ளார் அதற்கு முன் ரஜினிகாந்தை பற்றி தரக்குறைவாக பேசி உள்ளார். அவர் அடிக்கடி இப்படி பேசக் கூடியவர் தான்.
Latest Political News Today In Tamil
தற்போதைய அரசியல் பாதையில் விஜய் சரியாக சென்று கொண்டிருக்கிறாரா என்ற செய்தியாளரின் கேள்விக்கு ?
விஜய்க்கு தற்பொழுது ஜாக்பாட் அடித்துள்ளது, ஏனென்றால் திமுகவுக்கு மாற்று தமிழகத்தில் உதயசூரியனுக்கு எதிராக இரட்டை இலை தான் என 60ஆண்டு காலமாக இருந்து வந்தது.
விஜய் இன்னும் சின்னமே வாங்கவில்லை என்ன சின்னம் வரப்போகிறது என்பது கூட தெரியாது, விஜய்யை முன்னிறுத்தி திமுக அதிமுகவின் உண்மையான வீழ்ச்சியையும் அவர்களுடைய உண்மையான முகத்தையும் மறைக்கின்றனர் இது ஒரு வியாபார தந்திரம்.
அமைச்சர் சேகர் பாபுவின் குட்புக்கில் கஸ்தூரி இல்லை, என்னுடைய சமீபகால வரலாறை பார்த்தால் உங்களுக்கு புரியும், அதனால் அவர் குறித்து நான் பேச விரும்பவில்லை.
திமுக
2026 தேர்தலில் ஒரு கட்சிக்கு எதிராக அனைத்து கட்சிகளும் தனித்தனியாக போராடி வருகின்றனர். அனைத்து கட்சிகளும் ஒரு குடையின் கீழ் வரவேண்டும்.
மக்களைப் பொருத்தவரை அனைத்து பிரச்சனைகளுக்கும் ஏதோ ஒரு வகையில் ஆளுகின்ற திமுக அரசு காரணமாக இருக்கிறது என்ற மனநிலைக்கு வந்து விட்டனர்.
சமீபத்தில் வெள்ளம் வந்தது 4000 கோடிக்கு பைப்புகள் போடப்பட்டது எனக் கூறிய பின்னரும் அனைத்து இடங்களிலும் ஜெனரேட்டர் மற்றும் மோட்டார் பம்புகளை வைத்து தண்ணீரை உறிந்து கொண்டிருந்தனர். அப்புறம் எதற்கு 4000 கோடி அந்த 4000 கோடிக்கு ஜெனரேட்டரும் மோட்டார் பம்புகளையும் வாங்கி இருக்கலாமே,
இது மக்களுக்கும் தெரியும் அனைவரும் வெறுப்பில் உள்ளனர் இதை மீறி 2026இல் மீண்டும் திமுக ஜெயிக்குமா என்றால் தற்போது அனைவரும் தனித்தனியாக உள்ளனர்.
சீமான்
அதனால் அவர்கள் ஜெயிப்பார்கள் என்பதால் விஜய்யை உசுப்பேத்தி விடுவது இபிஎஸ்ஸை உசுப்பேத்தி விடுவது அண்ணாமலையை உசுப்பேத்தி விடுவது என பிரித்தாலும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சீமான் அவர்கள் ஏற்கனவே நான் தனித்து தான் நிற்பேன் என கூறியுள்ளார் அவர் என்னை திட்டினாலும் பரவாயில்லை அனைவரும் சேர்ந்து மக்களின் ஒரே ஆசையான திமுகவை வெளியேற்ற வேண்டும் என்பது அதை செய்துவிட்டு அதன் பின் உங்கள் கொள்கைகளை பாருங்கள் என தெரிவித்தார்.