- முகப்பு
- மாவட்டச் செய்தி
- இஸ்லாமிய பரதநாட்டிய கலைஞர் ஜாகிர்உசேன் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பல கோடி மதிப்புள்ள வைர கிரீடத்தை வழங்கினார்.
இஸ்லாமிய பரதநாட்டிய கலைஞர் ஜாகிர்உசேன் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பல கோடி மதிப்புள்ள வைர கிரீடத்தை வழங்கினார்.
JK
UPDATED: Dec 11, 2024, 8:46:33 AM
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சாமி திருக்கோயில்
108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சாமி திருக்கோவிலுக்கு ஏராளமானோர் தங்கம் வைரம் ஆகியவற்றை காணிக்கையாக வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் பரதநாட்டிய கலைஞரான ஜாகிர் உசேன், இன்று ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சாமி திருக்கோவிலுக்கு பல கோடி மதிப்புள்ள வைர கிரீடத்தை ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரியப்பன், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டரிடம் வழங்கினார்.
வைர கிரீடம்
ஏறத்தாழ அரை அடி உயரம் கொண்ட இந்த கிரீடமானது 3160 கேரட் மாணிக்க கல், 600 வைர கற்கள் மற்றும் மரகதக் கல்லை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ஒற்றை மாணிக்க கல் கொண்டு வரப்பட்டு குடைந்து எடுக்கப்பட்டு, 400 கிராம் தங்கத்தில் வைரம், மரகத கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.
Latest Trichy News Today In Tamil
இதனை வடிவமைப்பதற்கு ஏறத்தாழ 8ஆண்டுகள் ஆனது.
உலகில் முதல் முறையாக மாணிக்க கற்களால் செய்யப்பட்ட வைரக் கிரீடம் என்பது இதன் தனி சிறப்பாகும்.
பிறப்பால் தான் இஸ்லாமியராக இருந்தாலும் அரங்கநாதர் மேல் உள்ள பற்றால் இதனை செய்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.
இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்றாலும் அதன் உண்மையான மதிப்பை அவர் கூறவில்லை விரும்பவில்லை.