• முகப்பு
  • குற்றம்
  • காதலுக்கு மரியாதை இல்லை என விரக்தி அடைந்து கத்தியால் சரமாரியாக காதலியை குத்திய காதலன்.

காதலுக்கு மரியாதை இல்லை என விரக்தி அடைந்து கத்தியால் சரமாரியாக காதலியை குத்திய காதலன்.

தருண் சுரேஷ்

UPDATED: Dec 10, 2024, 6:44:08 PM

திருவாரூர் மாவட்டம்

மன்னார்குடி அடுத்த கோட்டூர் தோட்டம் பகுதியை  சேர்ந்த மணிகண்டன் என்பவரின்  மகள்  வசந்தி பிரியா ( வசந்தபிரியா )  (24). பட்டப்படிப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

கோட்டூர் அடுத்த நெருஞ்சினக்குடி கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரது மகன் மகாதேவன் (28). இவர் மன்னார்குடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். 

ஒரே சமூகத்தை சேர்ந்த இருவரும் கடந்த  8  வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில் மகாதேவன் நடவடிக்கை பிடிக்காததால் கடந்த சில நாட்களாக  அவருடன் பேசுவதை வசந்தி பிரியா தவிர்த்து வந்துள்ளார். 

இந்த நிலையில்,   வசந்தி பிரியா தனது வீட்டு வாசலில் நின்றிருந்த போது அங்கு வந்த மகா தேவன் தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தி உள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அவர்  மறைத்து வைத்திருந்த கத்தியால் வசந்தி பிரியாவின் கழுத்தில் குத்திவிட்டு தப்பியோடி விட்டார். 

இதில் காயமடைந்த வசந்தி பிரியாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக  திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்  இந்த சம்பவம் குறித்து கோட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து  மகாதேவனை  போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து மகாதேவன்  உறவினர்கள் கூறுகையில்  வசந்தி பிரியாவை மகாதேவன் 10 ஆண்டுகளாக காதலித்து இருந்ததாகவும் வசந்தி  பிரியாவிற்கு எல்லா உதவிகளையும் மகாதேவன் செய்து வந்துள்ளதாகவும்

கடந்த  ஆறு மாதமாக 108 ஆம்புலன்சில் உள்ளிக்கோட்டை பகுதி சேர்ந்த ரூபன் குமாருக்கும் வசந்தி பிரியாவுக்கும் காதல்  ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் இருவரும் விளக்குடியில் உள்ள  மாரியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டு  திருத்துறைப்பூண்டியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் 21.11.2024 அன்று தங்களது திருமணத்தை பதிவு செய்துள்ளார்கள்

இருவரும் திருமணம் செய்து கொண்டது  காலப்போக்கில் மகாதேவனுக்கு தெரிந்த நிலையில்  ஆத்திரமடைந்து வசந்தி பிரியாவை கத்தியால் குத்தியுள்ளதாக உறவினர் மற்றும் அப்பகுதி மக்கள்  தெரிவித்தனர்.

பிரியா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

VIDEOS

Recommended