• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ஆற்றின் கரையோரம் சென்று செல்பி எடுக்கவோ குளிக்கவோ துணி துவைக்கவும் கூடாது எனவும் பொது மக்களுக்கு எச்சரிக்கை.

ஆற்றின் கரையோரம் சென்று செல்பி எடுக்கவோ குளிக்கவோ துணி துவைக்கவும் கூடாது எனவும் பொது மக்களுக்கு எச்சரிக்கை.

சுரேஷ்பாபு

UPDATED: Dec 12, 2024, 1:06:14 PM

திருவள்ளூர் மாவட்டம் 

திருவள்ளூர் மாவட்டத்தில் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதன் காரணமாக பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு வரும் நீரின் அளவானது 3500 மில்லியன் கன அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 34.50 அடியாகவும் கொள்ளளவு 2900 மில்லியன் கன அடியாகவும் உயர்ந்து உள்ளது

மேலும் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதாலும் நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்வதாலும் சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பு கருதி  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையில் இருந்து மதகு எண் 7இன் வழியாக வினாடிக்கு 1000 கன அடி உபரி நீரை திறந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர் 

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்

மேலும் நீர்த்தேக்கத்திற்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகபடியாகும் நிலையில் கூடுதல் உபரி நீர் படிப்படியாக திறக்கப்படும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 

இதனை அடுத்து உபரி நீர் கொசத்தலை ஆற்றில் திறந்து விடப்படுவதால் கொசுத்தலை ஆற்றின் கரையோர கிராமங்களான நம்பாக்கம் கிருஷ்ணாபுரம் ஆட்ரம்பாக்கம், ஒதப்பை நெய்வேலி, எறையூர் பீமன்தோப்பு,  சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர் சடையான்குப்பம், எண்ணுர் மற்றும் கொசஸ்தலையாற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார் 

அபாய எச்சரிக்கை

அந்த எச்சரிக்கையில் தாழ்வான பகுதியில் வசிக்கும் கிராமத்தினர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் கொசத்தலை ஆற்றின் கரையோரம் சென்று செல்பி எடுக்கவோ குளிக்கவோ துணி துவைக்கவும் கூடாது எனவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார் 

மேலும் வெள்ளத்தினால் கிராம பகுதிக்குள் வெள்ளை நீர் புகுந்தால் உடனடியாக வருவாய்த் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளிக்கவும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கர் பொதுமக்களுக்கு அறிவுறுத்துள்ளார்.

 

VIDEOS

Recommended