- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பழனி நகராட்சி 25 வது வார்டில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சாலையை ஆக்கிரமிப்பு செய்து தண்ணீர் தொட்டி கட்டி வரும் அவலம்
பழனி நகராட்சி 25 வது வார்டில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சாலையை ஆக்கிரமிப்பு செய்து தண்ணீர் தொட்டி கட்டி வரும் அவலம்
கோபிநாத்
UPDATED: Dec 12, 2024, 10:11:09 AM
திண்டுக்கல் மாவட்டம்
பழனி நகராட்சி 25 வது வார்டில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையம் ( அர்பன் ஜிஹெச்) தினசரி புறநோயாளிகளாக சுமார் 100-ல் இருந்து 200 பேர் மருத்துவம் பார்ப்பதற்கு வருகின்றனர்
அப்படி வருவோர் குடிதண்ணீர் வழங்குவதற்காக சுகாதார நிலையத்திற்கு முன்பு சுமார் 10 அடி தூரத்தில் சுமார் 20 அடி நீளத்துக்கு பெரிய தொட்டியை கட்டி உள்ளனர்
சுகாதார நிலையத்திற்கு என்று நகராட்சியால் இவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது, இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக சாலையை ஆக்கிரமிப்பு செய்கின்றனர் எதிரில் உள்ள நகராட்சி இடத்தினை ஆக்கிரமிப்பு செய்கின்றனர் ( இந்த இடம் சுகாதார வாலகம் கட்ட உள்ள இடம்)
இப்பொழுது ரோட்டையும் ஆக்கிரமிப்பு செய்து நடு ரோட்டில் தண்ணி தொட்டி கட்டுகின்றனர் எந்த ஒரு நகராட்சியிலும் மாநகராட்சியிலோ இப்படி ஒரு அதிகாரி(MHO) செயல்படுவது கிடையாது இவர் பொது சுகாதாரத் துறைக்கு தான் அதிகாரி நகராட்சியில் இவருடைய பணி காலம் முடிந்துவிட்டது ஆனால் தற்பொழுது பழனி நகராட்சி அதிகாரி போல் செயல்படுவதாகவும்
உடனடியாக அந்த தொட்டியினை மூடி அப்பகுதி மக்கள் நடந்து செல்வதற்கும் வாகனத்தில் செல்வதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.