- முகப்பு
- மாவட்டச் செய்தி
- இந்தியா முழுவதும் ஆர் எம் எஸ் அலுவலகங்கள் பூட்டப்படுவதை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தப்படும்.
இந்தியா முழுவதும் ஆர் எம் எஸ் அலுவலகங்கள் பூட்டப்படுவதை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தப்படும்.
JK
UPDATED: Dec 11, 2024, 8:24:59 AM
திருச்சி
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆர் எம் எஸ் முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோட்டச் செயலாளர்கள் நம்பிஆனந்த், ரமேஷ்குமார் ஆகியோர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது இந்திய முழுவதும் செயல்பட்டு வரும் 93ஆர் எம் எஸ் அலுவலகங்கள் மூடப்படுவது கண்டித்தும், மேலும் திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட கரூர், கும்பகோணம் திண்டிவனம் ஆகிய அலுவலகங்கள் மூடப்பட்டதை கண்டித்து, உடனடியாக திறக்கப்பட வேண்டும்
மேலும் , ஆர் எம் எஸ் ரயில்வே ஜங்ஷன் அலுவலகம் எந்தவித முன்னறிவிப்பின்றி இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்தும் ஆட்குறைப்பு குறைப்பை கண்டித்தும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கோட்டச் செயலாளர் ஆனந்த் நம்பி இந்திய அரசு இந்தியா முழுவதும் 93 ஆர் எம் எஸ் அலுவலகங்களை மூட உத்தரவிட்டுள்ளது உடனடியாக உத்தரவை திரும்ப பெற வேண்டும்
மேலும் திருச்சி கோட்டத்தில் மூடப்பட்டுள்ள அலுவலக திறக்கப்பட வேண்டும், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இன்னொரு ஆடுகள் குத்தகையில் நடத்தப்பட்ட வந்த அலுவலகத்தை எந்தவித முன்னறிவிப்பின்றி இடமாற்றம் செய்ததை கண்டிக்கிறோம்.
உடனடியாக மத்திய அரசு இந்த உத்தரவை திரும்பப் பெறவில்லை என்றால் தொடர் உண்ணாவிரத போராட்டமும் மற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.