29 வயதுடைய இளைஞர் பதினைந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை.

லட்சுமி காந்த்

UPDATED: Dec 12, 2024, 6:40:13 PM

 

பாண்டிச்சேரி முருகப்பாக்கம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் நாகராஜ் (வயது 29). நாகராஜ் ஆவடியில் தங்கியிருந்து காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஹாட் மார்க் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் கடந்த ஒரு வருடமாக குவாலிட்டி இன்ஜினியர் ஆக பணிபுரிந்து வருகிறார்.

மாத்தூர் பகுதியில் அருண் எக்ஸல்லோ அப்பார்ட்மெண்டில் 15 வது மாடியில் வசிக்கும் தன்னுடைய நண்பர் கார்த்திக் என்பவரை சந்திக்க, தன்னுடைய நிறுவனத்தின் மேலதிகாரி சுப்பிரமணி என்பவரை அழைத்துக் கொண்டு அருண் எக்ஸெல்லோ அப்பார்ட்மெண்ட்டுக்கு நாகராஜ் வந்துள்ளார். 

சுப்பிரமணியிடம், தான் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்து வைக்க நீங்கள் தான் ஏற்பாடு செய்ய வேண்டும் , காதலியின் அம்மாவிடம் சமரசமாக நீங்கள் பேசி விட்டீர்களா என நாகராஜ் கேட்டுள்ளார் .

அதற்கு காதலியின் அம்மா திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை என சுப்ரமணி கூறியதால், ஏற்கனவே மனவருத்தத்தில் இருந்த நாகராஜ் திடீரென 15 நமது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் காவல்துறையினர் நாகராஜயின் சடலத்தை கைப்பற்றி பிறகு பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து நண்பர் மற்றும் மேலதிகாரி ஆகிய இருவரிடமும் விசாரணை செய்து வருகிறார்கள்.

 

VIDEOS

Recommended