• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • மழை காரணமாக தென்காசி குற்றால அருவிகள் அனைத்திலும் காட்டாற்று வெள்ளம்:, வேகமாக நிரம்பும் அணைகள்.

மழை காரணமாக தென்காசி குற்றால அருவிகள் அனைத்திலும் காட்டாற்று வெள்ளம்:, வேகமாக நிரம்பும் அணைகள்.

பாலமுருகன்

UPDATED: Dec 12, 2024, 7:47:02 PM

தென்காசி

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் தென்தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகரும் எனவும், இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகாலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகவும், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றால அருவிகள் அனைத்திலும் கடுமையான காட்டாற்று வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இன்று பெய்த மழையின் காரணமாக மதியம் முதல் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

மேலும், மாவட்ட அணைகள் மற்றும் நீர்நிலைகளில் நீரின் அளவு அதிகரித்து வருகின்றது. குறிப்பாக தென்காசி 82 மி.மீட்டரும், குண்டாறில் மழையின் அளவு அதிக பட்சமாக 68 மீ.மீட்டரும், இராமநதி அணையில் 62 மீ.மீட்டரும் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில், தென்காசி மாவட்டத்திலும் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருவதால், மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு 12.12.2024 அரை நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்த நிலையில், பல்வேறு இடங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் வானிலை மைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு மாவட்டத்திற்கு  (13.12.2024) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கனமழை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்த புகார்களை தெரிவிக்க 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண், 7790019008 என்ற வாட்ஸ் அப் எண் மற்றும் 04633 - 290548 என்ற பேரிடர் மேலாண்மைத் துறையின் அவசர கால எண்ணிலும் தொடர்பு கொள்ளலாமென மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

 

VIDEOS

Recommended