மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தந்த தமிழ் பேராசிரியர்

கோபிநாத்

UPDATED: Dec 11, 2024, 10:42:01 AM

திண்டுக்கல் மாவட்டம்

வேடசந்தூர் அருகே தண்ணீர் பந்தம்பட்டி கிராமத்தில் செயல்படும் அரசு கலைக்கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இக்கல்லூரியில் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த அருள்செல்வம் என்பவர் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். சமீபத்தில், மாணவிகளையும் பெண் பேராசிரியர்களையும் தனது செல்போனில் புகைப்படம் எடுத்ததாக அவர் மீது புகார் எழுந்தது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

இந்த குற்றச்சாட்டை அடுத்து, மாணவிகள் மற்றும் பெண் பேராசிரியர்கள் காவல் துறையிடம் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடமும் புகார் அளித்தனர். மேலும், மதுரை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநருக்கும் மனு வழங்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் எரியோடு போலீசார் மற்றும் இணை இயக்குநர் குணசேகரன் புகார் கூறிய மாணவிகள், பெண் பேராசிரியர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டதுடன், கல்லூரி பொறுப்பு முதல்வர் கீதா, பேராசிரியர் அருள்செல்வத்தை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

தொடரும் ஆசிரியர்களின் பாலியல் தொல்லை

இக்கல்லூரியில் இதற்கு முன்பும் பெண் பேராசிரியர்கள் சேர்ந்து தமிழ் பேராசிரியர்கள் மீது இதுபோன்ற புகார்கள் எழுப்பியதாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் பேராசிரியர் பாலா மீது இதே போல் புகார் எழுந்த நிலையில், தற்போது அருள்செல்வத்தின் மீதும் அதே குற்றச்சாட்டுகள் உள்ளது.

இதையடுத்து, சமூக ஆர்வலர்கள், இதுபோன்ற தொடர்ச்சியான புகார்களை அடிப்படையாக கொண்டு பெண் பேராசிரியர்களின் போக்கையும் விசாரித்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி உள்ளனர்.

 

VIDEOS

Recommended