சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக சில சேனல்களில் செய்தி வெளியான நிலையில், தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் - மாவட்ட எஸ்.பி.
செந்தில் முருகன்
UPDATED: Nov 29, 2024, 11:42:04 AM
மயிலாடுதுறை மாவட்டம்
டவுன் ஸ்டேஷன் ரோடு தெற்கு தெருவை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் மகன் அபிநாத்(20). இவருக்கு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவை சேர்ந்த 17 வயது சிறுமியுடன்; இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு தனது தந்தையுடன் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வந்த சிறுமி, தன்னை அபிநாத் நவ.25-ஆம் தேதி கடத்திச்சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக புகார் அளித்தார்.
Pocso
இப்புகார் குறித்து, மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சுகந்தி மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட சிறுமியை மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு முன்னிலைப்படுத்தி, அவரது வாக்குமுலம் பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து விசாரணையின் அடிப்படையில் அபிநாத் சிறுமியை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
தொடர்ந்து போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட அபிநாத் சிறையில் அடைக்கப்பட்டார்.
பாலியல்
பாலியல் துன்புறுத்தலில் அபிநாத் ஈடுபட அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர்கள் 5 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின் விடுத்த செய்திக்குறிப்பில், சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும்,
காவல்துறைக்கு கிடைத்த புகார் மனுக்களின் உண்மை தன்மை ஆராய்ந்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், வழக்கு விசாரணை காலங்களில் இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.