திமுக கூட்டணி நிர்பந்தம் என்று விஜய் கூறிய கருத்திற்கு எனக்கு உடன்பாடு கிடையாது - திருமாவளவன்
JK
UPDATED: Dec 6, 2024, 7:08:38 PM
திருச்சி
அரியலூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சி கலந்துகொண்டு சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் :
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் அம்பேத்கர் நினைவு நாளில் அம்பேத்கர் தொடர்பான நூலை வெளியிட்டு இருப்பதும் அம்பேத்கர் அவர்களைப் பற்றி பேசி இருப்பதும் பெருமை அளிக்கிறது.
பொது நீரோட்டத்தில் அம்பேத்கர் வெகுவாக பேசப்படுகிறார் அந்த வரிசையில் விஜய் அவர்களும் எல்லோருக்கும் ஆன தலைவர் என்ற நூலை வெளியிட்டிருப்பது வரவேற்பு உரியது, பாராட்டு கூறியது.
திமுக அல்லது திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் அழுத்தம் என்ற கருத்தை அவர் பதிவு செய்திருக்கிறார் அதில் எனக்கு உடன்பாடு இல்லை அப்படி எந்த அழுத்தமும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்தி இருக்கிறேன்.
தொல். திருமாவளவன்
அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்க கூடிய அளவுக்கு நானும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பலவீனமாக இல்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.
இந்த நிகழ்வில் நான் பங்கேற்காமல் போனதற்கு விஜய் காரணம் இல்லை அவருக்கும் எங்களுக்கும் எந்தவிதமான சிக்கலும் இல்லை. ஆனால் எங்கள் இருவரையும் வைத்து விஜய், திருமா ஆகியோர் மேடையில் ஏறப் போகிறார்கள் என்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத நிகழ்வை அரசியல் சாயம் பூசி உள்ளனர்.
விஜய்
அவர்கள் எந்தப் பின்னணியில் இயங்குகிறார்கள் என்று கருத்துக்களை முன்வைத்தது முக்கியமான ஒன்று ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் தேர்தல் களத்தில் நாங்கள் நிற்கிறோம், ஓரளவு எங்களாலும் யூகிக்க முடியும் யார் எந்த பின்னணியில் இயங்குகிறார்கள் பேசுகிறார்கள் என்பதை கணிக்க முடியும், அந்த வகையில் தான் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை அரசியல் ஆக்கி விடுவார்கள் அப்படி அரசியல் படுத்துவதை நான் விரும்பவில்லை.
இந்த அடிப்படையில் தான் தனியார் புத்தக வெளியிட்டார் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளேன்.
விஜய் மீது எந்த வருத்தமும் இல்லை.
தமிழகத்தில் எங்களை வைத்து காய் நகர்த்துகின்ற அரசியல் நடந்து கொண்டிருக்கிறது.
வெறும் வாய்க்கு அவள் கிடைத்தது போல வாய்ப்பு கொடுக்க விரும்பவில்லை அவருக்கு வாழ்த்துக்கள்.
திமுக
நான் சுதந்திரமாக எடுத்த முடிவு விடுதலை சிறுத்தைகள் கூட்டணிக்கு எந்த பாதகமும் ஏற்படாத வகையில் எடுத்த முடிவு இதில் எந்த பிரஷர் இல்லை. விஜய் சொல்லி இருக்கக்கூடிய கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு.
2026 இல் மன்னராட்சி வரக்கூடாது என கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பேசியிருக்கிறார் திமுகவை குறிப்பதாக இருக்கிறது என்ற கேள்விக்கு?
அவர் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்தாலும் வாய்ஸ் ஆப் காமன் விகடன் ஆகியோர் இணைந்து புத்தகத்தை வெளியிட்டுள்ளனர்.
அவர் சொன்ன கருத்திற்கு அவர் மட்டுமே பொறுப்பு கட்சி பொறுப்பல்ல.
Latest Political News Today In Tamil
ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒவ்வொரு சுதந்திரம் இருக்கிறது அதன்படி அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து திமுகவுக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்து வருகிறார் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு ?
திமுக கூட்டணி அங்கம் வகித்து வருகிறோம். திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்து வருகிறார் என்பது உண்மை. அவரிடம் விளக்கம் கேட்கப்படும். உரிய விளக்கம் கிடைக்கும் என பார்ப்போம்.