• முகப்பு
  • அரசியல்
  • தேர்தலில் ஜெயித்து வந்தவர் தானே உதய நிதி குறை சொல்ல முடியாது டி.டி.வி.

தேர்தலில் ஜெயித்து வந்தவர் தானே உதய நிதி குறை சொல்ல முடியாது டி.டி.வி.

கார்மேகம்

UPDATED: Dec 8, 2024, 2:06:08 PM

த.வெ.க. தலைவர் விஜய்

சென்னை நந்தனம் பாக்கத்தில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற த.வெ.க. தலைவர் விஜய் மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத மக்களுக்கு அடிப்படை சமூக நீதியான பாதுகாப்பை கூட உறுதி செய்ய இயலாத கூட்டணிக் கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்க மிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை

நீங்க உங்கள் சுயநலத்திற்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026- ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள் என்று தெரிவித்தார்

டிடிவி தினகரன்

இதைத் தொடர்ந்து அந்நிகழ்வில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனன் மன்னர் பரம்பரை போன்ற ஆதிக்கத்திற்கு தமிழகத்தில் இனி இடமில்லை 2026- ம் ஆண்டு தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் பிறப்பால் ஒரு முதலமைச்சர் தமிழகத்தில் உருவாக்கப்பட கூடாது என  தெரிவித்தார் இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் இன்று கோயம்புத்தூரில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்த போது புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் மற்றும் ஆதவ்அர்ஜுனன் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது

உதய நிதி ஸ்டாலின்

செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த டிடிவி தினகரன் உதய நிதி ஸ்டாலின் தேர்தலில் நின்று எம்.எல்.ஏ.ஆகி  ஜெயிச்சு தானே வந்தாரு அதை எப்படி நாம் குறை சொல்ல முடியும் தேர்தலில் மக்களை சந்தித்து வெற்றி பெறுபவர்களை பிறப்பால் வந்தவர்கள் என்று சொல்ல முடியாது எல்லா கட்சியும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என சொல்வது வழக்கமானது தான் இதை ஆணவம் என்று சொல்வது சரியாக இருக்காது

இதனால் நான் திமுகவிற்கு ஆதரவாக பேசுகிறேன் என நினைக்க வேண்டாம் என்று தெரிவித்தார். 

 

VIDEOS

Recommended