ஆதவ் அர்ஜுன் பேச்சு இரண்டு தலைவர்கள் பேசிய முடிவு செய்வார்கள் - அமைச்சர் அன்பில்மகேஷ்.
JK
UPDATED: Dec 7, 2024, 7:17:59 AM
திருச்சி
தமிழக துணை முதல்வர் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர, இளைஞர் அணியின் சார்பாக 47/3 மூன்றாவது நிகழ்வாக கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்வு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொற்கிழிகளை வழங்கி கௌரவித்தார்.
நிகழ்வில் திருச்சி மாநகரச் செயலாளர் மண்டல குழு தலைவர் மதிவாணன் தலைமை செயற்குழு வண்ணை அரங்கநாதன் உட்பட பல கலந்து கொண்டனர்.
அமைச்சர் அன்பில் மகேஷ்
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி :
உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு குறிப்பாக திமுக மூத்த முன்னோடிகளுக்குதிருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை மக்களுக்கு பயனுள்ள விதத்தில் கொண்டாடி வருகிறோம்.
தற்போது அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
DMK
எனவே மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது.
தற்போது PT Assistant 3000 ஆசிரியருக்கான தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நிறைவடைந்து அவர்களுக்கு பணி வழங்கப்படக் கூடிய சூழலில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள்தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் காரணமாக 3000 பேரையும் பணி நியமனம் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது.
இடைநிலைப் பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படவில்லை. பணி நியமனத்திற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆதவ் அர்ஜுன்
அவர்களுக்கும் சேர்த்தே தேர்வு நடத்தியுள்ளோம் முதல்வரின் உத்தரவை பெற்று அவர்களுக்கும் பணி வழங்கப்படும்.
விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் மன்னராட்சி அகற்றப்பட வேண்டும் என கூறியுள்ளது இரண்டு தலைவர்களும் பேசி தங்களுடைய கருத்துக்களை பேசி பரிமாறி கொள்ள வேண்டும். இதில் நாங்கள் சொல்வதற்கு எதுவும் இல்லை என தெரிவித்தார்.