திருச்சியில் லாட்டரி பரிசுத் தொகையை கொடுக்காமல் ஏமாற்றிய திமுக பிரமுகர்
JK
UPDATED: Dec 26, 2024, 7:22:49 PM
கேரளா லாட்டரி
திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (38). இவர் திருச்சி புத்தூர் வயலூர் ரோடு சர்ச் காலனியைச் சேர்ந்த மனோகர் என்கிற எஸ் வி ஆர் மனோகரிடம் கேரளா லாட்டரி சீட்டு ஒன்று வாங்கியுள்ளார். அந்த சீட்டுக்கு ரூபாய் 25ஆயிரம் பரிசுத்தொகை விழுந்தது.
இந்த பரிசுத் தொகையை மனோகர் மற்றும் அவரது கூட்டாளிகள் மலைக்கோட்டை வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்த ரவுடி ரங்கராஜன், காளிமுத்து, பாஸ்கர், நெப்போலியன் ஆகியோர் சேர்ந்து ஏமாற்றிவிட்டதாக கூறப்படுகிறது.
Crime News Updates
இது குறித்து மாதவன் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மனோகர் மற்றும் ரவுடி ரங்கராஜன் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட மனோகர் திமுக பிரமுகர். இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் ஜவுளி கடையும், புத்தூர் நால் ரோட்டில் ஹோட்டல் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.