சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது என்ன ?
Bala
UPDATED: Dec 25, 2024, 1:20:08 PM
சென்னை
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலன் முன்னிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலனுடன் உரையாடிக் கொண்டிருந்த மாணவியை இரு இளைஞர்கள் தாக்கியதோடு, அவர்களில் ஒருவன் மாணவியை வன்கொடுமை செய்ததாக புகார் செய்யப்பட்டுள்ளது.
கோட்டூர்புரம் காவல்துறையினர் புகாரின் அடிப்படையில் சம்பவத்துக்கு தொடர்புடையவர்களை மீட்கும் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகம்
கைது செய்யப்பட்ட நபர் பற்றிய தகவல்:
விசாரணையில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த 37 வயதான ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளான். அவன் மீது ஏற்கனவே 15க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் வழிப்பறி குற்றங்கள் பதிவாகியுள்ளன.
சம்பவத்தின் பின்னணி:
தினமும் இரவு நேரத்தில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்று தனிமையில் இருக்கும் காதலர்களை வீடியோ பதிவு செய்து மிரட்டுவதில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளான்.
அவன் மிரட்டிய மாணவிகளிடம் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இவனது கைப்பேசியில் பல வீடியோக்கள் இருப்பதையும் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
பாலியல் துன்புறுத்தல்
பல்கலைக்கழக நிர்வாகத்தின் விளக்கம்:
இந்திய அளவில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பதிவாளர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
கோட்டூர்புரம் காவல்துறை இந்தக் குற்றவாளி மீதான நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.