• முகப்பு
  • புதுச்சேரி
  • 47 பேருந்துகள் 25 டெம்போக்கள் டிக்கெட்டையும் ஒட்டு மொத்தமாக வாங்கிய புதுச்சேரி திமுகவினர்.

47 பேருந்துகள் 25 டெம்போக்கள் டிக்கெட்டையும் ஒட்டு மொத்தமாக வாங்கிய புதுச்சேரி திமுகவினர்.

சக்திவேல்

UPDATED: Nov 27, 2024, 8:40:27 AM

புதுச்சேரி

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில திமுக சார்பில் மாநிலம் முழுவதும் தொகுதிகள் வாரியாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளான இன்று புதுச்சேரி மாநில திமுக இளைஞரணி சார்பில் விடியல் பயணம் என்ற கருத்தை மையப்படுத்தி இன்று புதுச்சேரி மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கான இலவச பேருந்துகள் மற்றும் டெம்போ பயணம் தொடக்க விழா திமுக மாநில இளைஞரணி அமைப்பாளர் சம்பத் எம். எல். ஏ. தலைமையில் புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் நடைபெற்றது. 

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திமுக மாநில அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா கலந்துகொண்டு விடியல் பயணம் பொதுமக்களுக்கான இலவச பேருந்து மற்றும் டெம்போ பயணத்தை தொடங்கி வைத்தார்.

அதன்படி இன்று ஒரு நாள் புதுச்சேரி மாநிலம் முழுவதும் நகரப் பகுதியில் இயக்கப்படும் 47 பேருந்துகள் மற்றும் 25 டெம்போக்களில் ஒரு நாளுக்கு உண்டான மொத்த செலவுகளையும் திமுக இளைஞர் சார்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு இலவச பயணம்,உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பயணம் தொடங்கப்பட்டது.

 

VIDEOS

Recommended