திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது : விவசாயிகள் கவலை
தருண் சுரேஷ்
UPDATED: Nov 26, 2024, 7:53:42 AM
திருவாரூர் மாவட்டம்
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிரும் காற்றழுத்த தாழ்வுமண்டலம் இலங்கையையொட்டி உள்ள தென்மேற்கு வங்ககடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது இது புயலாக மாற உள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் மிதமான மழையாகவும், ஒருசில இடங்களில் விட்டுவிட்டு கனமழையாகவும் பெய்ய தொடங்கி உள்ளது.
வானிலை மையம்
மேலும் சென்னை வானிலை மையம் திருவாரூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுவித்த நிலையில் குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் , மன்னார்குடி, கூத்தாநல்லூர், வடுவூர், முத்துப்பேட்டை, வலங்கைமான், நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு லேசாக சாரல் மழை பெய்து வந்தநிலையில் தற்போது மிதமான கன மழை பெய்து வருகிறது
ஆனால் இன்று அதிகாலை முதல் மாவட்டம் முழுவதும் கருமேகம் சூழந்து காணப்படுவதோடு மிதமான மழையாக பரவலாக பெய்துவருகிறது.
விவசாயிகள் வேதனை
குறிப்பாக ஒருசில இடங்களில் விட்டுவிட்டு கனமழையும் பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் கணிப்பின்படி அதீத கனமழை பெய்தால் இம்மாவட்டத்தில் நடப்பு சம்பா, தாளடி பருவத்தில் சாகுபடி செய்துள்ள சுமார் 3.50லட்சம் ஏக்கர் பயிர்கள் கடுமையாக பாதிக்க கூடிய நிலை ஏற்படும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் மிகுந்த மனவேதனையில் ஆழந்துள்ளனர்.