• முகப்பு
  • வானிலை
  • இலங்கையில் இன்று பல பகுதிகளில் மழை - வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கையில் இன்று பல பகுதிகளில் மழை - வளிமண்டலவியல் திணைக்களம்

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Dec 20, 2024, 5:36:04 AM

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (20) அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வடமேற்கு மாகாணத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.original/img-20241220-wa0022
ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் ஊவா மாகாணத்தில் சில இடங்களில் மி.மீ. 50 வரை பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தவிர மத்திய> ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.

 

VIDEOS

Recommended