"நாளை கரையை கடக்கும் புயல்"
Bala
UPDATED: Nov 29, 2024, 5:53:01 AM
புயல் வலுப்பெற்றது
முன்னதாக புயல் வலுப்பெறாது என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், வானிலை மாற்றத்தால் புதிய அபாய நிலை உருவாகியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில், சென்னையில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் அடுத்த சில மணி நேரங்களில் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை மதியம் புதுச்சேரி அருகே, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடைப்பட்ட பகுதியில் புயல் கரையை கடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
புயல் - TNRains -WeatherUpdate - ChennaiRains - RainFall - FengalCyclone - RainAlert

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு