• முகப்பு
  • வானிலை
  • இலங்கையின் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 100 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது

இலங்கையின் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 100 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Nov 28, 2024, 3:43:57 AM

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (28) அதிகாலை 2.30 மணியளவில் இலங்கையின் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 100 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்தது.

இது நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் வடமேற்கு திசையில் மிக மெதுவாக நகர்வதாகவும் இன்று மேலும் வலுவடைந்து ஒரு சூறாவளியாக மாற வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இந்த சூராவளி தாக்கத்தினால் நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன் வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் மிக அதிக மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும்.

 இதே வேளை வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் எம். 150 மீட்டருக்கு மேல், மிக கனமழை பெய்யும் என கால நிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்வதுடன் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது கி.மீ. 60-70 என்ற மிக பலத்த காற்று வீசக்கூடும். நாட்டின் மற்ற பகுதிகளில் அவ்வப்போது காற்று வீசுகிறது. 40-50 பலத்த காற்றும் வீசும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது .

 

VIDEOS

Recommended