கடலூர்-சென்னை இடையே கடக்க உள்ள ஃபெங்கல் புயல்.
Bala
UPDATED: Nov 27, 2024, 9:03:54 AM
ஃபெங்கல் புயல்
புயல் கரையை கடக்கும் சமயத்தில், சென்னையில் நவம்பர் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் அதிவேக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
புயல் கரையை கடந்த பின்பு உள்நாட்டுப் பகுதிகளான ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்படுகிறது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயலின் காரணமாக, ஒன்பது துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Latest Cyclone Updates Today In Tamil
இதில் சென்னையின் எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம், காட்டுப்பள்ளி துறைமுகங்கள் மற்றும் காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
புயல் அருகில் உருவாகியுள்ளதை குறிக்கும் வகையில் இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.