கண்டி- மாத்தளை பிரதான வீதியில் மீண்டும் வௌ்ளம்
கண்டி நிருபர் ஜே.எம்.ஹாபீஸ்)
UPDATED: Nov 27, 2024, 2:02:58 AM
கடந்த மூன்று நாட்களாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக கண்டி மாவட்டத்திலும் இன்னும் பல இடங்களிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக அக்குறணை நகரத்தில் கண்டி- மாத்தளை பிரதான வீதியில் மீண்டும் வௌ்ளம் ஏற்பட்டது.
இதன் காரணமாக அக்குறணை யூடாக செல்லும் வாகனங்களுக்கு மாற்று வழியைப் பயன் படுத்த வேண்டிவந்தது.
அக்குறணை நகரத்திற்கு அண்மித்ததாக ஓடும் பிங்கா ஓயா மற்றும், வஹுகல ஓயா என்பவற்றின் நீர் மட்டம் அதிகரிக்கும் போது அக்குறணை நகரத்தின் தாழ்நிலம் பகுதிகளான சியா ஞாபகார்த்த வைத்திய சாலை சந்தி மற்றும் துனுவில வீதி என்பன அடிக்கடி வௌ்ளத்தில் மூழ்குகின்றன. இது எல்லை மீறும் போது நகரின் இதர பகுதிகளும் பாதிக்கப்படுகின்றன.
மேற்படி இரண்டு சிற்றாருகளின் இரு ஓரங்களிலும் அதிக கட்டிடங்கள் உள்ளதாலும், குறுக்காக பல பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதாலும் நீர் பரந்து ஓட வழியின்றி திடீர் என நீர் மட்டம் உயர்வதால் அச்சந்தர்பங்களில் ஆற்று நீர் பாதை ஊடாக பாய ஆரம்பி்க்கிறது. அதன் போதே இந்நிலை ஏற்படுகிறது என சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.