கோரைகளில் பூத்திருக்கும் வெண்மை நிற பஞ்சு பூக்களால் வாகன ஓட்டிகள் அவதி.

சண்முகம்

UPDATED: Nov 26, 2024, 4:07:15 AM

கடலூர் மாவட்டம்

புவனகிரி அருகே கீழ் வளையமாதேவி பகுதியில் புவனகிரி- விருத்தாசலம் சாலை செல்கிறது. இந்த சாலையில் அதன் ஓரமாக புதர்போல அதிக அளவில் கோரை புற்கள் பல அடி உயரம் வளர்ந்துள்ளன.

இந்நிலையில் இந்த கோரை புற்களில் வெண்மை நிற பஞ்சு போன்ற பூக்கள் பூத்திருப்பதால் இவை காற்றில் பறந்து அப்பகுதி வழியாக கடக்கும் பேருந்து பயணிகள், வாகன ஓட்டிகள் பொதுமக்கள் என பலரையும் அச்சுறுத்தி வருகிறது.

Latest Cuddalore News 

இந்த பஞ்சு போன்ற பூக்கள் காற்றில் பறப்பதால் அவை கண்களிலே பட்டு கண் பாதிப்பையும் மற்றும் வாகனத்தில் செல்வோர் கண்களில் பட்டு விபத்துகளையும் ஏற்படுத்துவதாக இருந்து வருகிறது.

இதனை அப்புறப்படுத்தி பராமரிப்பு பணி செய்ய வேண்டும் என இப்பகுதி கிராம மக்களும், வாகன ஓட்டிகளும் பலமுறை தெரிவித்த நிலையிலும்  நெடுஞ்சாலைத்துறையினர் கண்டும் காணாமல் இருப்பதாக குறிப்பிட்டு வருகின்றனர்.

உடனடியாக நெடுஞ்சாலைத் துறையினர் சாலையோர பராமரிப்புகளை மேற்கொண்டு பலரையும் அச்சுறுத்தி வரும் கோரைகளை அப்புறப்படுத்திட வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

 

VIDEOS

Recommended