- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ஒரு ஜேசிபி இயந்திரத்திற்கு மூன்று ஓனர்கள் சான்றிதழ் வழங்கிய கேகே நகர் வட்டார போக்குவரத்து அலுவலகம்
ஒரு ஜேசிபி இயந்திரத்திற்கு மூன்று ஓனர்கள் சான்றிதழ் வழங்கிய கேகே நகர் வட்டார போக்குவரத்து அலுவலகம்
சண்முகம்
UPDATED: Nov 27, 2024, 10:28:04 AM
கடலூர் மாவட்டம்
சிதம்பரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் பெரியப்பட்டு பகுதியில் உள்ள சுதாகர் என்பவர் பயன்படுத்தி வந்த ஜே.சி.பி. இயந்திரத்தை வாங்கியுள்ளார், குறிப்பாக சிறுக சிறுக சேர்த்த 6 லட்சம் ரூபாய் கையில் கொடுத்தும் மீதமுள்ள 15 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை தனியார் வங்கியில் கடன் வாங்கி கொடுத்த பிறகு ராமச்சந்திரன் மனைவி சித்ரா பெயரில் ஜே.சி.பி. இயந்திரம் பதிவு செய்வதற்காக சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் எடுத்துச் சென்றபோது ஆவணங்களை சரிபார்த்த வட்டார போக்குவரத்து அலுவலர் இந்த வாகனம் தற்போது சென்னை கே.கே நகரில் ஒருவர் பெயரில் உள்ளதால் தங்கள் பெயரில் பெயர் மாற்றம் செய்ய முடியாது என தெரிவித்துள்ளனர்,
RTO
உடனடியாக ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி வங்கி ஊழியர் ஆகியோர் சென்னை கே.கே நகரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று கேட்டபோது வட்டார அலுவலரின் நேர்முக உதவியாளர் ஆனந்தராமன் என்பவர் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்படுவதால் தவறு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறி ஒரு வார காலத்தில் அதனை சரி செய்து தருவதாக தெரிவித்துள்ளார்,
இதனிடையே திருச்சியில் ஒருவருக்கு இதே இயந்திரத்தின் நம்பருடன் வேறொரு நபருக்கு வாகனத்தின் உரிமையாளர் என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
இதனை அடுத்து மீண்டும் ராமச்சந்திரன் குடும்பத்தினர் மற்றும் வங்கி ஊழியர் திருச்சி சென்று கேட்டபோது தற்போது இங்கு இல்லை எனவும் மீண்டும் சென்னை கே.கே நகர் வட்டார அலுவலகத்திற்கு வேறொரு பெயரில் சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்,
கேகே நகர் வட்டார போக்குவரத்து அலுவலகம்
இதனால் குழப்பம் அடைந்த ராமச்சந்திரன் குடும்பத்தினர் மீண்டும் கே.கே நகரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று நேர்முக உதவியாளர் ஆனந்தராமன் கேட்டபோது காத்திருங்கள் சரி செய்து தரப்படும் என்று கூறிவிட்டு சுமார் 7 மாத காலமாக உழைத்து வாங்கிய வாகனத்தை பெயர் மாற்றம் செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு வரும் நிலையில் சிதம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மீண்டும் முறையிட்டனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராமச்சந்திரன்.
பெரியப்பட்டு பகுதியைச் சேர்ந்த சுதாகர் இந்த வாகனத்தின் முதல் ஓனர் எனவும் அதனை எனது மனைவி பெயரில் வாங்குவதற்காக 6 லட்சம் ரூபாய் சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை கையில் கொடுத்தும் மீதமுள்ள பணத்தை வங்கியின் மூலம் கடன் வாங்கி கொடுத்து பெயர் மாற்றம் செய்ய வந்தபோது இந்த வாகனம் சென்னை கே.கே நகரில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து ஒரு நபருக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததன் பெயரில் நாங்கள் அங்கு சென்று நேர்முக உதவியாளர் ஆனந்தராமிடம் கேட்டோம்
போலி சான்றிதழ்
ஆனால் அதற்கு தவறு நடந்து விட்டது சரி செய்து தருகிறோம் என கூறி அடுத்த ஒரு வாரத்தில் திருச்சியில் ஒரு நபருக்கு இதே எங்கள் வண்டி நம்பரில் போலியான சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது மீண்டும் திருச்சியில் இருந்து கேகே நகரில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வேறொரு நபருக்கு போலியான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது இதில் எங்கு தவறு நடக்கிறது என்று எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை
மேலும் எந்த ஒரு வாகனமாக இருந்தாலும் வாகனங்களை நேரில் ஆய்வு செய்த பிறகுதான் சான்றிதழ் வழங்கப்படும் ஆனால் எதன் அடிப்படையில் எங்கள் வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து வேற ஒரு நபர்களுக்கு பதிவு செய்யப்படுகிறது என கேள்வி எழுப்பிய ராமச்சந்திரன் கே.கே நகரில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் ஆனந்தராமன் திருட்டு வாகனங்களுக்கு போலியான ஆவணங்கள் கொடுப்பதால் எங்களை அலை கழித்து வருவதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
Latest Cuddalore District News in Tamil
எங்கள் பிரச்சனைக்கு என்னதான் தீர்வு என தெரியவில்லை எனவும் மிகவும் கஷ்டத்தில் இருப்பதால் கடந்த ஏழு மாதங்களாக வாகனத்தை வாங்கி சம்பாதிக்க முடியாமல் வங்கியில் தவணை கஷ்டப்பட்டு கட்டி வருவதாகவும் தெரிவித்தவர் உடனடியாக தமிழக அரசு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெறும் இது போன்ற சம்பவங்களை கலை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்,
அதேபோன்று வங்கி ஊழியர் கூறுகையில் நாங்கள் கடன் கொடுக்கும் முன்பு வாகனத்தின் பதிவுகளை சரி செய்து சரியான முறையில் இருந்ததால் கடன் வழங்கினோம் ஆனால் தற்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெறும் குழப்பத்தால் வாகனத்தை உரிமையாளர் பெயரில் பெயர் மாற்ற முடியாமல் என்ன செய்வது என்று புரியாமல் தவித்து வருவதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
பேட்டி : ராமச்சந்திரன், வாகனத்தை வாங்கி பாதிக்கப்பட்டவர் சிதம்பரம்.
கவியரசன், தனியார் வங்கி ஊழியர் சிதம்பரம்.