எல்லாவற்றுக்கும் நீதி மன்றம் ( தான்) என்றால் அரசும் அதிகாரிகளும் எதற்கு ?

கார்மேகம்

UPDATED: Nov 24, 2024, 11:27:00 AM

சென்னை

கால்வைத்த இடமெல்லாம் கன்னி வெடி என்று சொல்வதுபோல் பொது வெளி மற்றும் இணைய வழி என எங்கு பார்த்தாலும் விதவிதமாக வகை வகையாக நிதி மோசடிகள் தலைவிரித்தாடுகிறது

எம்.எல்.எம். என்ற மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் காந்தப் படுக்கை , ஈமூ கோழி என ஆரம்பித்து சமிபத்தில் பூதகரமாக வெளிவந்த ஆருத்ரா நியோ மேக்ஸ் வரை பட்டியல் நீள்கிறது மோசடிகள் வெடித்து வெளிச்சத்துக்கு வந்தாலும் அடுத்து புதுப்புது வழிகளில் மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள் மோசடிப் பேர்வழிகள்

அதற்கு முக்கிய காரணம் மோசடிகளில்  ஈடுபட்டவர்களுக்கு இதுவரை கடுமையான தண்டனைகள் கிடைக்கவே இல்லை என்பதுதான் இத்தகைய மோசடிப் பேர்வழிகளுக்கு அரசுத்துறை மற்றும் காவல்துறையினரே தோழர்களாக இருக்கும் போது எப்படி தண்டனைகளை எதிர்பார்க்க முடியும் மக்களுக்கு நீதி எப்படி  கிடைக்கும்

ஒவ்வொரு முறையும் மோசடி சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வரும் போதும் அரசுதுறை வங்கி துறை காவல் துறையினரும் உடந்தையாக இருப்பதும் வெளிச்சத்துக்கு வருகிறது

தற்போது வெளிவந்திருக்கும் லக்கி பாஸ்கர் என்ற திரைப்படம் கூட இவற்றையெல்லாம் பட்டவர்த்தனமாகவே வெளிச்சமிட்டிருக்கிறது

இத்தகைய மோசடிகள் குறித்து இப்போது நேரடியாகவே காவல்துறைக்கு எதிராக சாட்டையை வீசியிருக்கிற சென்னை உயர்நீதி மன்றம் 2020- ல் ஆன்மீக சுற்றுலாவுக்கு விசா பெற்றுத் தருவதாகச் சொல்லி சென்னையை சேர்ந்த ஜெயசீஸ் என்பவர் ரூ.13- லட்சத்தை ஏமாற்றிவிட்டார் என்று வேலூரைச் சேர்ந்த மனோகர் தாஸ் புகார் செய்தார்

வழக்குப் பதிவு செய்ததோடு சரி  இதுவரையிலும் காவல்துறை நடவடிக்கையே எடுக்க வில்லை மனோகர் தாஸ் உயர் நீதி மன்றப் படியேறினார் வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஸ் சந்திரா மோசடிகள் தொடர்கின்றன

இது போல் பதிவாகியுள்ள பல்வேறு மோசடி வழக்குகளில் நீதி மன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காமல் காவல் துறையினர் நிலுவையிலேயே வைத்துள்ளனர்

பாதிக்கப் பட்டவர்கள் நிவாரணம் கேட்டு ஒவ்வொரு முறையும் நீதி மன்றத்தை நாட வேண்டியிருக்கிறது இது மிகவும் வேதனையைத் தருவதாக இருக்கிறது என்று சாடியுள்ளார்

அரசோ பொருளாதார குற்றப் பிரிவோ காவல் துறையோ ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவே இல்லை என்பதற்குச் சான்று தான் நீதிபதியின் இந்த சாடல் 

அரசின் மீதும் காவல் துறையின் மீதும் நம்பிக்கை இழந்து தான் நீதி மன்றத்தை நாடுகிறார்கள் மக்கள்

அதிலும் வழக்குச் செலவு செய்ய பண வசதியும் நேரமும் இருப்பவர்கள் தான் இப்படி நீதி மன்றத்தை நாட முடிகிறது மற்றவர்களின் நிலை ?

பொருளாதாரக் குற்றங்களைக் கட்டுப்படுத்துவது பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்வது மோசடிப்பேர்வழிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றுவது என ( தான்) செய்ய வேண்டியவற்றை செய்யவே இல்லை எனும்போது இந்த அதிகாரிகளும் அரசும்  எதற்கு ?

 

VIDEOS

Recommended