- முகப்பு
- மாவட்டச் செய்தி
- டாஸ்மாக் கடையால் பலருடைய வீட்டு வாசல் முன்பு போதை ஆசாமிகள் துணி இல்லாமல் படுத்து கிடக்கும் அவலம்.
டாஸ்மாக் கடையால் பலருடைய வீட்டு வாசல் முன்பு போதை ஆசாமிகள் துணி இல்லாமல் படுத்து கிடக்கும் அவலம்.
லட்சுமி காந்த்
UPDATED: Nov 25, 2024, 10:09:46 AM
காஞ்சிபுரம் மாநகராட்சி
41 வது வார்டு, ஜெம் நகர் விரிவு பகுதியான மூவேந்தர் நகர் என்ஜி பேலஸ் திருமண மண்டபம் அருகே அரசு மதுபானக்கடை எண் 4188 இயங்கி வருகிறது.
இப்பகுதியில் அரசு ஊழியர்கள், அதிகாரிகள், மாவட்ட தலைமை நீதிபதி, மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , அலுவலக ஊழியர்கள் என பெரும்பாலான அதிகாரிகள் வசிக்கும் முக்கிய பகுதியாக உள்ளது.
Breaking News Today In Tamil
கடந்த மூன்று ஆண்டு காலமாக இங்குள்ள அரசு மதுபான கடை மூலம் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. மது அருந்துவோரால் பொதுமக்களுக்கு அவ்வப்போது பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது என கூறப்படுகிறது.
மது பிரியர்கள் மது அருந்திவிட்டு ஒவ்வொரு வீட்டு வாசலில் பொட்டு போட்டு துணி இல்லாமல் படுத்து உறங்குவதும் சண்டையிடுவதும் கொச்சையாக பேசுவதும் தொடர்ந்து நிலவி வருகிறது.
Latest Kanchipuram News
இந்த அவலங்களை கண்ட பொதுமக்கள், தொழில்துறை அமைச்சர் தாமோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர், மகளிர் நல ஆணையர், சமூக நலத்துறை ஆணையர் என அனைவரிடமும் புகார் மனு அளித்துள்ளனர்.
அதைதொடர்ந்து இந்த 4088 எண் கொண்ட அரசு மதுபான கடையை அகற்றுவதாக செய்தித்தாள்களிலும், தொலைகாட்சிகளிலும் அரசு தரப்பில் செய்திகள் தரப்பட்டன. செய்தி வந்து ஒரு வருட காலமாகியும் இதுவரை இந்த கடையை அகற்றுவதற்கான எந்தவித நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை.
Latest Crime News In Tamil
இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மகளிர், பெண் குழந்தைகள், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், நடைபயிற்சி செல்லும் முதியவர்கள் , அரசு அதிகாரிகள் , காவல்துறையினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த கடையில் மது வாங்கி மது அருந்துவோர் அருகிலுள்ள வீடுகளின் வாசலிலும், விசாலாட்சி நகர் , அருணாச்சலம் நகர் , ஜெம் நகர் விரிவாக்க பகுதி பூங்கா பகுதிகளிலும், காலி மனைகளிலும், சாலைகளின் ஓரங்களிலும் அமர்ந்து மது அருந்துவதால் போக்குவரத்து இடைஞ்சலும், அந்த பகுதி வழியாக செல்லும் பொது மக்களுக்கு அச்சமும் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமன்றி, செவிலிமேடு குளத்திலிருந்து அருணாச்சலம் நகர் நான்குமுனை சந்திப்பு வரை சுமார் கால் கிலோ மீட்டர் தூரத்துக்கு சுகாதாரமற்ற முறையில் பல தள்ளுவண்டி கடைகளும் சிறு சிறு பங்க் கடைகளும், பல உணவகங்களும் முளைத்துள்ளன.
இரவு நேரங்களில் 10 மணியை கடந்தும் மது அருந்துவோர் அசைவ உணவக கடைகளில் அமர்ந்து மது அருந்துவதால் அவ்வப்போது கை கலப்பும் திருட்டு , வழிப்பறி போன்ற சம்பவங்களும் ஏற்படுகின்றன.
சாலையோர பங்க் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், போதை வஸ்துக்கள் என அனைத்தும் தங்கு தடையின்றி விற்க்கும் படுகிறது.
இதனால் அந்த பகுதியில் உள்ள கால்வாய்கள் அனைத்தும் பிளாஸ்டிக் டம்ளர்களாலும் குப்பைகளாலும் நிரம்பி வழிகின்றன. இதனால் 41வது பகுதியில் உள்ள கால்வாய்கள் அனைத்தும் கழிவுநீர் நிரம்பி சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றன.
இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பொதுமக்கள், மாணவ, மாணவிகள், மூத்த குடிமக்கள் என அனைவருக்கும் நன்மை பயக்கும் விதமாக உடனடியாக இந்த டாஸ்மாக் கடையினை அகற்றுமாறு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிமுக மாமன்ற உறுப்பினர் சிந்தன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.