- முகப்பு
- மாவட்டச் செய்தி
- மத்திய அரசு திருத்தப்பட்ட மின்சார திட்டத்தை திரும்பப் பெற விவசாய சங்கத்தினர் தலையில் துண்டைப் போட்டு போராட்டம்
மத்திய அரசு திருத்தப்பட்ட மின்சார திட்டத்தை திரும்பப் பெற விவசாய சங்கத்தினர் தலையில் துண்டைப் போட்டு போராட்டம்
JK
UPDATED: Nov 26, 2024, 12:31:36 PM
திருச்சி மாவட்டம்
திருச்சியில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தலையில் முக்காடு போட்டும், கையில் மண்சட்டி ஏந்தியும் நூதன முறையில் மழையில் நனைந்தவாறு, மழை யை பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது தமிழக அரசு நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும், மத்திய அரசு திருத்தப்பட்ட மின்சார திட்டத்தை திரும்ப பெற வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தின் பணியாளர்களை விவசாய பணிக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டனர்.
Latest News In Tamil Today
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆற்றுப் பாசன விவசாய சங்க தலைவர் விஸ்வநாதன்.
தமிழக அரசானது நில ஒருங்கிணைப்பு சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
மத்திய அரசு அறிவித்துள்ள திருத்தப்பட்ட புதிய மின் திட்டத்தில் விவசாயிகள் பெற்று வந்த இலவச மின்சாரம் பாதிக்கும் நிலை ஏற்படும்.
100 நாள் வேலை திட்டம்
எனவே, மத்திய அரசு இந்த திருத்தப்பட்ட மின்சார திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
100நாள் வேலை திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் எந்தப் பணிகளும் பார்க்காமல் தினமும் 300 ரூபாய் கூலி பெறுகின்றனர்.
எனவே 100நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாய பணிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்தார்.