ஃபெஞ்சல் புயல் சென்னைக்கு அருகே

Bala

UPDATED: Nov 30, 2024, 3:03:59 AM

ஃபெஞ்சல் புயல்

சென்னைக்கு அருகே தென்கிழக்கில் 190 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இது மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. வானிலை மையத்தின் தகவலின்படி, புயல் இன்று பிற்பகலில் மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது.

புயல் முன்னெச்சரிக்கையாக மாமல்லபுரத்தில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னையின் அடையாறு, பெசன்ட் நகர், மற்றும் திருவான்மியூர் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை சாலையின் அருகிலுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

கல்பாக்கத்தில் பரவலாக மழை பெய்து, கடலுக்கு 13 அடி உயரத்திற்கு அலைகள் எழுந்து கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்படுகிறது.

சூறைக்காற்று

சென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை ஏற்பட்டுள்ளதால், விமானங்கள் தரையிறங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மஸ்கட், குவைத், மற்றும் மும்பை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த 5 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் சுற்றி வருகின்றன.

ஃபெஞ்சல் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, சிங்கப்பூர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், மங்களூர், மற்றும் திருச்சி இண்டிகோ உள்ளிட்ட 3 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

VIDEOS

Recommended