• முகப்பு
  • புதுச்சேரி
  • பொதுமக்கள் ஜீவசமாதி செய்து கொள்வதற்காக கழுத்தில் மாலையுடன் குழியில் இறங்கி போராட்டம்.

பொதுமக்கள் ஜீவசமாதி செய்து கொள்வதற்காக கழுத்தில் மாலையுடன் குழியில் இறங்கி போராட்டம்.

சக்திவேல்

UPDATED: Sep 26, 2024, 12:01:26 PM

புதுச்சேரி

அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீராம்பட்டினம் செல்லும் வழியில் உள்ள செட்டிகுளம் பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் 52 வருட காலமாக வசித்து வருகின்றனர்.

அவர்கள் இலவச மனைப்பட்டா வேண்டும் என்று அரசுக்கு பலமுறை மனு கொடுத்துள்ளனர் இதனை பொறுப்பெடுத்தாத அரசு அதிகாரிகள் அப்பகுதி மக்களை கொடுக்கும் மனுவின் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இந்த நிலையில் தற்போது அரியாங்குப்பம் மற்றும் வீராம்பட்டினம் செல்லும் சாலை விரிவாக்கம் செய்வதற்காக சாலை ஓரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. 

இன்றைய புதுச்சேரி செய்திகள்

இதற்காக செட்டிகுளம் பகுதியில் வசித்து வரும் மக்களை வீட்டை காலி செய்ய கூறி மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் நோட்டீஸும் அவர்களுக்கு வழங்கி உள்ளது ஆனால் அவர்கள் இதுவரை வீட்டை காலி செய்யவில்லை.

மேலும் சாலை விரிவாக்கத்திற்கு போக மீதி இடத்தில் தமக்கு பட்டா வழங்க வேண்டும் அல்லது தங்களை கைலாசவிற்கு அனுப்ப வேண்டும் என்று கூறி கடந்த வாரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தினர்.மாவட்ட ஆட்சியரும் அதன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 

இந்த நிலையில் மீண்டும் வீட்டு காலி செய்யக்கோரி செட்டிகுளம் பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது

சமீபத்திய புதுச்சேரி செய்திகள்

இதனை வாங்க மறுத்த அவர்கள் இன்று வீட்டின் பின்புறம் பின்புறம் ஆழமான பள்ளம் தோண்டி மஞ்சள் குங்குமம் பூசி பூஜைகள் செய்து ஜீவ சமாதி அடைய போவதாக கூறி கழுத்தில் மாலை அணிந்து கொண்டு குழியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் அரியாங்குப்பம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

மேலும் இது குறித்து அவர்கள் கூறும்போது... சாலை விரிவாக்கத்திற்கு தேவையான இடத்தை எடுத்துக் கொண்டே மீதி இடத்தில் தமக்கு பட்டா வழங்க வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

 

VIDEOS

Recommended