சுங்குவார்சத்திரம் அருகே தடை செய்யப்பட்ட போதை புகையிலை மற்றும் பாக்குகள் பெட்டிக்கடைகளில் அமோக விற்பனை.
லட்சுமி காந்த்
UPDATED: Nov 15, 2024, 12:52:22 PM
காஞ்சிபுரம் மாவட்டம்
மூளை முடுக்கெல்லாம் போதை கலாச்சாரம் பல ரூபங்களில் வேரூன்றி வருகின்றது.
இதில் தொழிலாளர்கள் மட்டுமின்றி இளைஞர்களும், மாணவர்களும் போதைக்கு அடிமையாகும் சூழ்நிலையை சில சமூக விரோத கும்பல்கள் தயவு தாட்சண்யம் இல்லாமல் செய்து வருகின்றனர்.
இதை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த விதமான உறுதியான நடவடிக்கைகளும் எடுக்காததால் அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையங்களும் இதை கண்டு கொள்வதில்லை.
போதைப் பொருட்கள்
அதனால் போதை பொருட்கள் பல ரூபங்களில் உருவெடுத்து அனைத்து கடைகளிலும் விற்பனை செய்யும் அளவுக்கு வளர்ச்சி பெற்று வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் காவல் எல்லைக்கு உட்பட்ட சிவபுரம் பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றது .
இங்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களும் வட மாநில ஆண் பெண் என ஆயிரக்கணக்கில் வேலை செய்து வருகின்றார்கள்.
Latest Crime News Today In Tamil
தொழிலாளர்கள் அதிகம் வசிக்கக்கூடிய இந்தப் பகுதிகளில் போதை வஸ்துகளை வாங்கி வந்து விற்பனை செய்தால் அதிக அளவில் லாபம் கிடைக்கும் என்ற காரணத்தினால் கடையின் உரிமையாளர்கள் தயவு தாட்சணையும் பார்க்காமல் பல விதமான போதை பாக்குகளையும் புகையிலைகளையும் கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்தி வந்து கடைகளில் விற்பனை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.
Breaking News Today In Tamil
இந் நிலையில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பாக்குகள் போதை புகையிலைகளை, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சிவபுரம் என்ற பகுதியில் அதிகம் மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினருக்கு வந்த தகவலை அடுத்து, அங்கு கடை வைத்துள்ள குமார் வயது 38 என்பவர் கடையில் மது விலக்கு காவல்துறையினர் சோதனையிட்டனர்.
அவருடைய கடையில் மறைத்து வைத்து விற்பனை செய்த கூல் லிப் 180 , விமல் 720, வி1 690 வந்த போதை பாக்குகள் போதை புகையிலைகள் என மொத்தம் 1590 பாக்கெட்கள் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
போதைப் பாக்குகளை சாப்பிட்டால் இளைஞர்களின் வாழ்க்கை சீரழிந்து போகுது என தெரிந்தும் கூட வியாபாரிகள் சற்று கூட மனசாட்சி இல்லாமல் , அனைத்து கடைகளிலும் போதைப் பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்யும் நிலை அதிகரித்து வருகிறது.